ETV Bharat / state

காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பொதுமக்கள்!

author img

By

Published : May 27, 2019, 11:19 PM IST

கரூர்: காவிரி கூட்டுக்குடிநீர் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வருவதாக சமத்துவபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் காலி குடங்களுடன் முறையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள்


கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சமத்துவபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வருவதாகக் கூறி காலி குடங்களுடன் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், “தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 30 குடும்பங்கள் நீரின்றி தவித்து வருகிறோம். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆதாரங்கள் பகுதியில் போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தந்து மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பொதுமக்கள்

இதனையடுத்து, மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், தண்ணீர் பிரச்னையை போக்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். காலி குடங்களுடன் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:காவிரி கூட்டுக்குடிநீர் மாதம் ஓரிரு நாட்கள் மட்டும் வருகிறது- இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


Body:குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட வந்த கிராம பொதுமக்கள்.

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா இடையப்பட்டி அருகே உள்ள எழுவகக்ரியூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் மாதம் ஓரிரு நாட்கள் மட்டுமே வருவதாக கூறி குடிநீர் கேட்டு காலி குடத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று முறையிட வந்தனர்.


தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 30 குடும்பங்கள் நீர் இன்றி தவித்து வருகிறோம் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது ஆதாரங்கள் பகுதியில் போர்வெல் அமைத்து சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தந்து மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மனு அளித்து விட்டு திரும்பிய மக்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளோம் மாவட்ட ஆட்சித் தலைவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்கள்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

TN_KRR_01_27_WATER_ISSUES_TN7205677


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.