ETV Bharat / state

கட்டு கமிஷனை... வெட்டு முன்பணம் 30 ஆயிரத்தை - பிடிஓவுக்கு கைப்பூட்டு!

author img

By

Published : Dec 8, 2021, 11:11 AM IST

Updated : Dec 8, 2021, 12:08 PM IST

எஸ். புதூரில் ஒப்பந்தம் விட 30 ஆயிரம் ரூபாய் கையூட்டு வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

sd
d

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூன்று பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதை எடுக்க ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நிர்மல்குமாரை அணுகி உள்ளார்.

அப்போது ஒப்பந்தம் விட லஞ்சம் வேண்டுமெனவும், முன்பணமாக 30 ஆயிரம் ரூபாயைத் தர வேண்டுமெனவும் நிர்மல்குமார் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி சிவகங்கை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் ஆலோசனைப்படி எஸ். புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மை தடவிய 30 ஆயிரம் ரூபாயை நிர்மல்குமாரிடம் வெள்ளைச்சாமி கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் மணிமன்னன், ஆய்வாளர் குமாரவேல், உதவி ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் நிர்மல்குமாரைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கரூரில் கல் குவாரி உரிமையாளர் கடத்திக்கொலை: குற்றவாளிகளை நெருங்கும் காவல் துறை

Last Updated : Dec 8, 2021, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.