ETV Bharat / state

'தம்பி மல! பில்லு இன்னும் வரல..?' கரூரில் அண்ணாமலையை கலாய்த்து போஸ்டர்!

author img

By

Published : Dec 26, 2022, 2:18 PM IST

Updated : Dec 26, 2022, 3:04 PM IST

பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்சுக்கு பில் கேட்டு கரூர் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

a
a

கரூர்: கடந்த சில வாரங்களாக திமுக - பாஜகவினர் இடையே அண்ணாமலை பயன்படுத்தும் ரஃபேல் வாட்சுக்கான பில் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் ரஃபேல் வாட்சுக்கான பில் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று கூறியதோடு அதற்கு கெடு விதித்திருந்தார்.

ஆனால், டிசம்பர் 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "2021-ஆம் ஆண்டுக்கு பிறகு வாங்கப்பட்ட ரஃபேல் வாட்ச் ரசீது உள்ளிட்ட வருமான விவரங்களை விரைவில் தமிழக மக்களை சந்திப்பதற்காக துவங்க உள்ள பாதயாத்திரை முதல் நாளில் எனது அனைத்து சொத்து விவரங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். பொதுவெளியில் தனது சொத்து விவரங்களை வழங்கியதில் ஒரு பைசா அதிகமாக இருந்தாலும், தனது சொத்துக்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக பதிவிட்டார். இதுபோல திமுகவினர் சொத்து விவரங்களை வெளியிட தயாரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவினர் தேர்தலில் போட்டியிடும் பொழுது சொத்து விவரங்களை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர் என தெரிவித்திருந்தார். எனவே பில் இருக்கிறதா இல்லையா? என்பதற்கான ஒரு பதிலை அளித்தால் போதும். ஏப்ரல், மே மாதம் வரும் என 'கோழி காலையில் கொக்கரக்கோ என கூவுது' என்று கூறுவதை போல நகைச்சுவையாக உள்ளது என சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பாஜக மாநில தலைவர் ரஃபேல் வாட்ச் வாங்கிய விவகாரம் குறித்து மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனிடையே கரூர் திருக்காம்புலியூர் பெரியார் சிலை அருகே "தம்பி மல! இன்னும் பில்லு வரல" என்று நடிகர் வடிவேல் கேட்பதைப் போல போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பர போஸ்டர் படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் வடிவேலு காமெடி திரைப்படத்தில் பேசுவதைப் போன்ற வசன வரிகள் மூலம் தம்பி மல இன்னும் வட்ச் பில் வரல என வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து திமுகவினரிடம் கேட்ட பொழுது ரபேல் வாட்ச் வாங்கும் அளவிற்கு ஆடு மாடு வளர்ப்பதாக கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யாருடைய வருமானத்தில் விலை உயர்ந்த வாட்ச் வாங்கியுள்ளார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.எளிமையான வாழ்க்கையை துவக்கி நடத்தி வந்ததாக கூறி வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்பொழுது மாற்றி பேசுவதே சர்ச்சைக்கு காரணமாக உள்ளது என தெரிவித்தனர். ரஃபேல் வாட்ச் பில் ரசிது கேட்டு திமுகவினர் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ள சம்பவம் மீண்டும் ரஃபேல் வாட்ச் பில் விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Vaikuntha Ekadashi: ஸ்ரீரங்கத்தில் முத்து சாய கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்!

Last Updated :Dec 26, 2022, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.