ETV Bharat / state

லேசான மழைக்கே ஒழுகும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடம்!

author img

By

Published : Oct 30, 2019, 6:58 PM IST

கரூர்: லேசாக பெய்த மழைக்கே ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடத்திற்குள் மழைநீர் புகும் நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

government School Building Damaged in Karur idaiyyapattai village

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தே. இடையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்றுவருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளி தொடங்கியது. நேற்று முதல் இன்றுவரை பருவமழை லேசாக பெய்துவரும் நிலையில், ஆங்காங்கே கட்டடத்திலிருந்து மழைநீர் ஒழுகும் காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டாக சேதமடைந்த இந்தக் கட்டடம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இன்றுவரை அந்தக் கட்டடத்தின் மீது எந்த நடவடிக்கையும் நிர்வாகம் சார்பாக எடுக்கப்படவில்லை.

லேசான மழைக்கே ஒழுகும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடம்

லேசான மழை திடீரென்று பலமாக பெய்தால் பள்ளியின் கூரைகள் இடிந்து விழும்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

Intro:
கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை !

அரசு பள்ளியில் ஒழுகும் கான்கிரீட் கட்டிடத்தில் மாணவர்களின் படிப்பு ?
Body:கரூர் அருகே அரசுப்பள்ளியில் ஒழுகும் கான்கிரீட் கட்டிடம், காட்சி வைரலாகி வருகின்றது !

கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை !

அரசு பள்ளியில் ஒழுகும் கான்கிரீட் கட்டிடத்தில் மாணவர்களின் படிப்பு ?

மாணவர்களின் நிலை என்ன ?


கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தே.இடையப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமையும், திங்கள் கிழமையும் தீபாவளி பண்டிகையை யொட்டி, நேற்று பள்ளி துவங்கியது. நேற்று முதல் இன்றுவரை பருவமழை லேசாக பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே கட்டிடத்தில் இருந்து மழைநீர் ஒழுகும் காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 5 வருடங்களாக சேதமடைந்த இந்த கட்டிடம் குறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை வட்டாரவளர்ச்சி அலுவலரிடமும், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனுக்களாக கொடுத்துள்ள நிலையில், இன்றுவரை அந்த கட்டிடத்தின் மீது எந்த வித நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கவில்லை, மேலும், மழைநீர் ஒழுகும் கட்டிடத்தில் பயிலும் மாணவர்களின் நிலை என்ன ? என்றும் இந்திய அளவில் கல்வித்தரத்தில் தமிழகம் முதலிடம் நோக்கி என்று கூறும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த பள்ளிகளையும் காண வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், இந்த லேசான மழை திடீரென்று பலமாக பெய்தால் கூரைகள் மாணவர்கள் மேல் விழும் நிலையும், அபாயமும் ஏற்பட்டும் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டுவது ஏன் ? என்பது தான் தெரியவில்லைConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.