ETV Bharat / state

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு - 3,676 கி.மீ. தூரம் கடந்து குமரிக்கு வந்த வடமாநில பெண்

author img

By

Published : Feb 26, 2023, 4:55 PM IST

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து தனி ஒருவராக சைக்கிள் பயணம் செய்து சுமார் 3,676 கி.மீ. தூரத்தை கடந்து கன்னியாகுமரிக்கு வந்தடைந்த வட மாநில பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

Etv Bharat
Etv Bharat

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு

கன்னியாகுமரி: மகாராஷ்டிரா மாநிலம் பூனாவைச் சேர்ந்தவர் பிரீத்தி மாஸ்க் (46). இவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்ட தூர விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் தனது சைக்கிள் பயணத்தை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் இருந்து கடந்த 12ஆம் தேதி தொடங்கியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வந்தடைந்தார்.
மொத்தமுள்ள 3ஆயிரத்து 676 கி.மீ., தூரத்தை 11 நாட்கள் 22 மணி நேரம் 21 நிமிடங்களில் கடந்து கன்னியாகுமரி வந்தடைந்து சாதனை புரிந்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் அவர் தொடர்ந்து சைக்கிள் மிதித்துள்ளார். மக்களிடம் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன். நான் கடந்து வந்த பாதையில் கடுமையான சூறாவளி காற்று, பனி மற்றும் வெயிலின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இருந்தாலும் வழிநெடுகிலும் மக்கள் தனது கோரிக்கைக்கு பெரும் வாழ்த்துகளையும், வரவேற்பையும் அழிந்தது மகிழ்சியாக உள்ளது என சாதனை குறித்து சைக்கிள் பயண வீராங்கனை பிரீத்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. முன்னாள் மதுப்பிரியரின் நச் போஸ்டர் மெசேஜ்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.