ETV Bharat / state

“காங்கிரஸ் அரசியலில் இல்லாத நிலை உருவாக வேண்டும்” - அண்ணாமலை பேச்சு

author img

By

Published : Jul 3, 2023, 3:30 PM IST

கன்னியாகுமரி நாகர்கோவிலில் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கன்னியாகுமரி: நாகர்கோவில் நாகராஜர் கோயில் திடலில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை என்று கூறியவர்கள் திமுகவினர்.

பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

மீனவர்களின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி: குமரி மண்ணில் 2021 ஆம் ஆண்டு மோடி வந்தார்கள். அவர் தனது சொந்த மண் போன்று கொண்டாடினார். 2024 இல் நடைபெறும் தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தில் இருந்தும் குமரி மண்ணில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன். மீனவர்களின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி. முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் மீனவர்களுக்கு என தனி அமைச்சரவை உருவாக்கியது மோடி அரசு.

மீன் விவசாயிகள்: மீனவ சொந்தங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். ஏனென்றால் வரலாறு காணாத மீன் உற்பத்தியை உருவாக்கி உள்ளீர்கள். மொத்த மீன் உற்பத்தி 96 லட்சம் டன்னில் இருந்து 105 டன்னாக உயர்த்தி உள்ளார்கள் மீனவர்கள். மீன் உற்பத்தியில் 3வது நாடாக நம் நாட்டை மீனவர்கள் உயர்த்தி உள்ளார்கள். மோடி வந்த பிறகு மீனவர்களின் திறமையை உணர்ந்து அவர்களை உயர்த்தியுள்ளது. 121 லட்சம் டன் உயர்த்தி 96 சதவீதம் மீன் உற்பத்தியை மீனவர்கள் உயர்த்தி உள்ளார்கள்.

இந்தியாவின் மீன் 126 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். மீனவ சொந்தங்களின் புதிய பெயர் மீன் விவசாயிகள்
33 லட்சம் மீன் விவசாயிகளுக்கு மீனவ அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீன் விவசாயிகள் உண்மையை உணர வேண்டும். மீன் விவசாயிகளுக்கு தந்தை இருக்கிறார் என்றால் அது மோடி. 2014 வரை தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார்கள். ஆனால் இப்போது ஒரு துப்பாக்கி சூடும் நடக்கவில்லை.

ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்லும் போது உங்களுடன் மோடியும் இருந்து வருகிறார் என்று உணருங்கள். 2024 தேர்தலில் இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு உறுப்பினரை அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அமைச்சராக பொன்னார் கொண்டு வந்ததில் இன்னும் 28 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் வைத்து மோடி அழகு பார்த்தார். ஆனால் மனோ தங்கராஜ் ஒரு பதிவை போட்டுள்ளார்.

என் கையில் செங்கலாக உள்ளது: தேர்தல் வாக்குறுதி 2 லட்சம் வீடுகள் மீனவர்களுக்காக கட்டுவோம் என்று திமுக கூறினார்கள், ஆனால் கட்டினார்களா?. ஆனால் அங்கு இல்லை என் கையில் செங்கலாக உள்ளது. அவர்கள் கட்டி தருவதாக கூறிய வீடுகள் ஒன்று கூட கட்டி கொடுக்கவில்லை. கன்னியாகுமரியில் கிடைக்கும் இயற்கை ரப்பரை வைத்து ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் பூங்கா அமைப்போம், நாகர்கோவிலில் தொழிற்பேட்டை அமைப்போம், புதிய மீன்வள கல்லூரி கட்டுவோம் என்று வாக்குறுதிகள் கூறினார்கள்.

ஆனால் ஒன்றும் காணவில்லை. இந்தியாவில் ஏராளமான சிறிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியுள்ளோம். ஆனால், தமிழகத்தில் ஜப்பான் உதவியுடன் டெல்லியில் இருப்பது போன்று எய்ம்ஸ் கட்ட உள்ளார்கள். வேலை நடந்து கொண்டு இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன் வேலை துவங்கி விட்டது. 2026 மார்ச் மாதத்திற்குள் எய்ம்ஸ் வந்து விடும். மதுரை மண்ணில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக 54வது வாக்குறுதியில் கூறினார்கள். எதுவும் செய்யவில்லை.

காங்கிரஸ் அரசியலில் இல்லாத நிலை உருவாக வேண்டும்: மூச்சு இருக்கா என்று இவரை கயிற்றால் கல்லில் கட்டி கடலில் போட்டாலும் கடல் ஏற்றுக்கொள்ளாது. மோடி காலில் இருக்க கூடிய நகத்தில் இருக்கும் அழுக்கிற்கு கூட தகுதியானவர் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ். அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காதவர் மனோ தங்கராஜ் என்னும் நிலையை மக்கள் கொடுக்க வேண்டும். மோடி சொன்ன காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை நான் கன்னியாகுமரியில் நிறைவேற்ற போகிறேன் என்று மாவட்ட தலைவர் தர்மராஜ் கூறினார்.

ஆனால் நான் அவரிடம் காங்கிரஸ் அரசியலில் இல்லாத நிலையை மோடி சொன்னார். ஆவினில் மொத்த 34 லட்சம் லிட்டர் பால் வாங்குகிறார்கள். இவர்கள் குடிநீர் வழங்கும் திட்டத்தை துவங்க போவதாக கூறுவது ஸ்பிரிங் நிறுவனத்திற்கு ஆதரவாக துவங்க உள்ளனர். ஒரு அமைச்சர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணி வாங்கி தருவதாக பொய் சொல்லி பணம் வாங்கி உள்ளார். ஆனால் அவரை தனது கட்சியினுடன் சேர்த்துள்ளார்கள்.

சரத் பவார்: கைது செய்த உடன் ஹார்ட் அட்டாக், உடனே நீதிமன்றத்திற்கு வழக்கு, உடனே ஆபரேசன். ஆனால் தமிழக அரசு மருத்துவமனையை விட தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர். தமிழகத்தின் மாண்பை கெடுத்து, திருடனுக்காக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது. ஊழல் அமைச்சர் ஊழல்வாதியை பார்க்க எல்லா அமைச்சர்களும் வரிசை கட்டி நிற்கின்றார்கள். பாட்னாவில் எதிர்கட்சி தலைவர்கள் எல்லாம் கூட்டம் போடுகின்றார்கள் நட்டநடுவில் இருந்தவர் சரத் பவார்.

இன்று சரத்பவார் கட்சி மகாராஷ்டிராவில் 40 எம்பி பாஜகவில் சேர்ந்து விட்டார்கள் கட்சியின் தலைவராக அமைக்கபோவதாக சொன்னவரே இங்கு வந்துவிட்டார். இப்போது நம்ம ஆளுக்கு குளிர் வந்து விட்டது. நடுவில் இருந்த கட்சிக்கே இந்த நிலமை என்றால் ஓரத்தில் இருந்த இவர்கள் நிலை என்னவாகும். அறத்தின் சாட்சி படி ஆட்சி நடக்குமானல் அதனை ஒன்றும் செய்யமுடியாது. பாட்னாவில் கூட்டம் முடிந்த பிறகு ஸ்டாலினை காணவில்லை.

இந்த நாட்டை கூறு போட்டார்கள்: துரோகிகளை தமிழ் மண் என்றுமே அனுமதிக்காது. டி.கே சிவக்குமார் மேக்தாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகிறார். அதையும் மீறி தமிழக முதல்வர் பெங்களூர் செல்கிறார். 2004 இல் ஒரு ரூம்ல 15 பேர் இருந்தார்கள். அவர்களிடம் யார் அடுத்த பிரதமர் என்று கேட்டபோது சோனியா காந்தி என்று ஒருவர், மற்றொருவர் என்று இன்னொருவர். 15 பேரும் எங்களிடம் இத்தனை எம்பிக்கள் இருக்கிறார்கள். நீங்கள் எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று ஆட்டை கூறு போட்டது போல் இந்த நாட்டை கூறு போட்டார்கள்.

கடைசியில் வாய் பேசாத மன்மோகன் சிங் அவர்களை பிரதமாக்கினார்கள். 2024 ல் அதே போன்று தான் எதிர்கட்சியில் நடக்க போகிறது. ஆனால் மக்கள் விடமாட்டோம். சரத் பவார் எம்.எல்.ஏக்கள் வெளியே போனது போல் தமிழகத்திலும் எம்.எல்.ஏக்கள் வெளியே போக வேண்டுமா. தமிழக மக்கள் அனைவரும் பொது சிவில் சட்டத்தை வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் திமுக வேண்டாம் என்கிறது.

வேலை செய்யும் எம்.பியை தேர்ந்தெடுங்கள்: அம்பேத்கர் அவர்கள் பொது சிவில் சட்டம் ஏன் வேண்டும் என்று கூறியுள்ளார். 1935 வரை ஹூரியத் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 1937ல் சரியத் சட்டத்தை கொண்டு வந்தார்கள். நேரு கூறியது பெரும்பான்மையான இந்துக்கள் இதனை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று. அம்பேத்கர் சொல்லி கொடுத்த அனைத்தையும் இவர்கள் மறந்து விட்டார்கள். பொது சிவில் சட்டத்தை பாரத பிரதமர் மோடி கொண்டு வர உள்ளார்.

இந்துக்களுக்கு ஏற்கனவே பொது சிவில் சட்டம் வந்து விட்டது. இதில் பயன்பெறுபவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள். இஸ்லாமிய வீட்டில் பெண் குழந்தை இருக்குமானால் அவர்கள் பயன் பெற உள்ளார்கள். இரண்டாவது கிறிஸ்தவர்கள் பயன் பெற உள்ளார்கள். மைனாரிட்டி என்னும் வார்த்தையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டியுள்ளது.

நாகர்கோயில் மேயர் பாஜககாரன் கையை உடைப்பேன் என்று கூறினார். இந்த கூட்டத்தை பார்த்து கொள்ளுங்கள். இந்த மாவட்டத்தில் பலரை கட்டுப்படுத்த வேண்டி உள்ளது. மனோ தங்கராஜ் அவர்களின் சாதனைகளை பட்டியலிட வேண்டி உள்ளது. கொரோனா காலத்தில் வீடியோ கான்பிரன்ஸ் செய்தார்கள். அதற்கு 2 கோடியே 52 லட்சம் ரூபாய் காரணம் காட்டியுள்ளார்.
எந்த வேலையும் செய்யாத மந்திரி உங்களுக்கு கிடைத்துள்ள காரணத்தால், வேலை செய்யும் எம்.பியை தேர்ந்து எடுங்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக குறித்து அவதூறு; வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.