ETV Bharat / state

தொடர்மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; ஆனந்தக் குளியல் போடும் மக்கள்!

author img

By

Published : Jun 1, 2022, 11:48 AM IST

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் திற்பரப்பு அருவியில் பெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வெள்ள ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.

திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் அப்பகுதியிலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துவருகிறது.

இதனால், பேச்சிப்பாறை அணையிலிருந்து மே21ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கபட்டு வந்தது. இந்நிலையில் தொடர்மழையால் அணையிலிருந்து 1000 கன அடி உபரிநீர் திறக்கபட்டுள்ளது.

இதையடுத்து கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியை தண்ணீர் மூழ்கடித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவித்தனர்.

இதனால், அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து அருவியின் கீழ் பகுதியிலுள்ள ஆற்றில் அமைந்துள்ள பாறைகளின் மீது குழந்தைகளுடன் ஏறி ஆபத்தான குளித்தனர்.

வெள்ள அபாயத்தை உணராமல் குளித்த பொதுமக்கள்

இதனால், ஆற்றில் குளிக்கும் சிறுவர்-சிறுமியர்கள் உட்பட அனைவரையும் வெள்ளத்தில் அடித்து செல்லும் அபாயம் உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் இந்தப் பகுதிகளில் குளிக்க தடை விதிக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: Video: தென்காசியில் வீணான குடிநீரில் குளியல் போட்ட 'ரவுசு' இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.