ETV Bharat / state

Senthil Balaji Arrest: "செந்தில் பாலாஜியை விலக்கி வைப்பது திமுகவுக்கு நல்லது" - பொன்.ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jun 14, 2023, 4:26 PM IST

அமலாக்கத்துறையினரால் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்: இது குறித்து நாகர்கோவிலில் பா.ஜ.க., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
pon radhakrishnan press meet

pon radhakrishnan press meet

கன்னியாகுமரி: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் மதுபான பார்களில் முறைகேடுகள் நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வந்தனர்.

அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடைபெற்றது, அவர்மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்பு அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் பா.ஜ.க., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழில் நம் மூதாதையர்கள் அழகான வார்த்தை சொல்லியிருக்கிறார், உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். அது அமைச்சராக இருந்தாலும் பொருந்தும்.

தான் தூய்மையானவன் என்பதை காட்ட வேண்டிய பொறுப்பு செந்தில் பாலாஜி-க்கு உள்ளது. செந்தில் பாலாஜி-யை அமைச்சரவையிலிருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் திமுக விற்கும் நல்லது. இது 2015 ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க., வினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதன் திமுக வில் வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா?

தமிழக அரசாங்கம் இவருக்கு துணையாக நின்றால், அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக அதாவது தமிழக அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள். கைது நடவடிக்கை மற்றும் நெஞ்சுவலியும் வந்துள்ளது இவை அனைத்துக்கும் காரணம் திராவிட முன்னேற்ற கழகமே. மேலும் முதல்வர் சென்று பார்த்துள்ளார், உண்மையான இதய பிரச்சினை தானா என்று, இதை விட கேவலமான விசயம் வேரில்லை.. திமுகவினர் அவர் முகத்தை பார்க்காமல் இருப்பது செந்தில் பாலாஜிக்கு மன அமைதியை தரும் என்று நான் கருதுகின்றேன்.

குற்றம் சுமத்தியவர்கள் திமுகவினர்., இதற்கு அத்தனைக்கும் காரணம் திமுகவினர் என்பதை செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திமுகவின் இந்த வழக்கு தொடர்பாக அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என சந்தேகம் செந்தில் பாலாஜி தனித்து விடப்பட்டுள்ளார் என்பதை அவரது உறவினர்கள் உணர வேண்டும். இதுவரை தவறு செய்தவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதையும் படிங்க: Bypass surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.