ETV Bharat / state

தமிழ் மொழியை வளர்ப்பதில் திராவிட மாடல் அரசின் முகத்திரை கிழிந்துள்ளது - மாஜி எம்.எல்.ஏ முத்துகிருஷ்ணன் கண்டனம்

author img

By

Published : May 13, 2023, 3:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான முத்துகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து தன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான முத்துகிருஷ்ணன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான முத்துகிருஷ்ணன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான முத்துகிருஷ்ணன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

கன்னியாகுமரி: கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பிளஸ் 2 - பொது தேர்வில் அந்தந்த மாநில மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 100% வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் தமிழ் பாடப் பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் மாநில அளவில் இரண்டு பேர் மட்டும் தான் பெற்று உள்ளனர். எனவே, தமிழ் மொழியை வளர்க்கிறோம் என்று பொய் பிரசாரம் செய்து கொண்டு, இந்த அரசு தமிழ் மொழியை வளர்ப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான முத்துகிருஷ்ணன் தன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

வேதியியல், இயற்பியல், அறிவியல் பிரிவுகளில் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக மாணவர்கள் சாதனை பெற்றுள்ளனர். ஆனால், கணிதம் பாடத்தில் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு மதிப்பெண் விகிதம் குறைந்துள்ளது. இதனால் பொறியியல் கட் - ஆஃப் மார்க் குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான முத்துகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”அண்மையில் வெளிவந்த பிளஸ் டூ ரிசல்ட் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் எழுதியதில் மாநில மொழியான தமிழ் மொழி மிக வீழ்ச்சி அடைந்துள்ளது. மூச்சுக்கு மூச்சு தமிழை வளர்க்கிறோம் என்று கூறும் இந்த ஆட்சியில், தாய் மொழியில் மாநில அளவில் இரண்டு பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் அந்த மாநில மொழியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் 100 மார்க் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்கள்.

தமிழகத்தில் தமிழின் தரம் குறைந்துவிட்டதற்கு இந்த பிளஸ் டூ ரிசல்ட் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. தாய் மொழியை வளர்க்கிறோம் என்று சொல்லி பொய் பிரசாரங்கள் செய்து, உண்மை நிலை தாய் மொழியில் தோற்று இருப்பது தெரியவந்துள்ளது. செம்மொழி அரசு திராவிட மாடல் அரசு என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு தமிழ் மொழியை வளர்ப்பதில் அக்கறை காட்டவில்லை என்பது பிளஸ் டூ ரிசல்ட் மூலம் தெரியவந்துள்ளது” எனக் கூறினார்.

மேலும், ''இந்த முறை தேர்வு முடிவுகளில் வேதியியல், இயற்பியல், கணினி, அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிக சதவீதம் பெற்றுள்ளது.

வேதியலில் கடந்த ஆண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் 1500 பேர்கள் பெற்றிருந்தார்கள். இந்த ஆண்டு அது இரட்டிப்பாகி 3909 பேர் என எண்ணிக்கை வளர்ச்சி அடைந்துள்ளது. இதுபோன்ற இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் 634ஆக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் உள்ள தேர்வு முடிவில் அது 812ஆக உயர்ந்துள்ளது. அது போன்று கணினி அறிவியல் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் கடந்த ஆண்டு 3,827 பேர் இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு அது 4618 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் இந்த அரசு தோற்று இருப்பது இந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மூலம் வெளியாகி உள்ளது'' என குற்றம்சாட்டியுள்ளார்.

''இதேபோன்று கணித பாடத்திலும் கடந்த ஆண்டினை விட மூன்று மடங்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1858 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருந்தார்கள், இந்த முறை வெறும் 690 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு குறைந்துள்ளது. கணித மதிப்பெண்கள் குறைந்துள்ளதையடுத்து பொறியியல் கட் ஆஃப் மார்க் குறைய வாய்ப்பு இருப்பதாக’’ கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . மேலும் அவர் கூறுகையில், ”மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கை புதிய கல்விக் கொள்கை என்பது இந்திய மக்களால் ஆதரிக்கப்பட்ட கொள்கை. நாம் இந்தியாவில் இருக்கிறோம். தமிழ்நாடு என்பது தனி நாடு அல்ல.

தமிழ்நாடு என்பது இந்தியாவினுடைய ஒரு அங்கம் தான். ஆகவே புதிய கல்விக் கொள்கை அனைத்து மக்களும் அனைத்து மாநில மக்களும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, புதிய கல்விக் கொள்கையினால் நம்முடைய மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தவிர, அதனால் அழிவது இல்லை. எந்த கெடுதலும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இரு மொழிக் கொள்கை என்று சொல்லி நம்முடைய பிள்ளைகளை எல்லாம் தரம் தாழ்ந்து வெளிநாடுகளில் போய் வெளி இடங்களில் போய் பழகுவதைக் கூட தடுக்கின்ற ஒரு முகமாகத்தான் நம்முடைய மொழிக் கொள்கை இருக்கிறது.

தமிழில் கூட நாம் சரியாக தேறவில்லை. தமிழை கூட சரியாகப் பேச முடியவில்லை. மாண்புமிகு அமைச்சர்களில் சிலருக்கு கூட தமிழிலே சரியாகப் பேச முடியாத அளவிற்கு இந்த அரசாங்கம் இன்றைக்கு இருக்கிறது என்பதை நினைக்கின்ற போது மிகுந்த வேதனைப்படுகிறோம். பொது மக்கள் ஆகிய நாங்கள் இந்த அரசின் தவறுகளை நாம் களைய வேண்டும் என்று விரும்புகிறோம்” எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: திருமண ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு; தவறை தட்டிக்கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.