ETV Bharat / state

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

author img

By

Published : Aug 2, 2022, 9:37 PM IST

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு பள்ளிகளுக்கு விடுமுறை- தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு
கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு பள்ளிகளுக்கு விடுமுறை- தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கூறுகையில், எதிர்பார்த்த அளவிற்கு கனமழை இன்னும் குமரி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. இருந்தாலும் மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கூட அதனை சமாளிக்கின்ற வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த்

மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழையும் குறைந்தபட்சமாக மூன்று சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 76 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அதில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 22 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் உள்ளது.

50 தற்காலிக முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. மழை நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். கடந்த முறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஆறுகளில் குளிக்க சென்றவர்கள் தான் தண்ணீரில் இழுத்துச் சென்று இறந்தார்கள். எனவே மக்கள் ஆறுகளுக்கு குளிக்க செல்ல வேண்டாம். அரக்கோணத்தில் இருந்தும் பாதுகாப்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது என்றார்.

இதையும் படிங்க:'எடப்பாடி பழனிசாமி தவறான செய்தியைப் பரப்புகிறார்' - அமைச்சர் சக்கரபாணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.