ETV Bharat / state

கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

author img

By

Published : Aug 3, 2021, 9:29 PM IST

கல்குவாரிக்கு செல்லும் கனரக வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வாகன விபத்துகள் ஏற்படுவதாக கூறி காவாந்தண்டலம் கிராம மக்கள் லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குவாரி லாரிகள்
கல்குவாரி லாரிகள்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் வட்டத்திற்கு உள்பட்டது காவாந்தண்டலம் கிராமம். இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாகரல் என்ற பகுதியில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியிலிருந்து காவாந்தண்டலம் வழியாக சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் எம்சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த லாரிகளால் அப்பகுதியில் அதிகளவு சுற்றுச்சூழல் பாதிப்பும், வாகன விபத்தும் ஏற்படுகிறது எனக் கூறி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் அவ்வழியாக வந்த லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் டி.எஸ்.பி முருகன், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தங்களது பகுதியில் 24 மணி நேரமும் லாரிகள் சென்று வருவதால் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, சுவாச கோளாறு பிரச்சினை ஏற்படுவதாகவும், வாகன விபத்துகள் நடப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அதனால் இப்பகுதியில் இனி வாகனங்களை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஆடி 18ஆம் பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.