ETV Bharat / state

பாரத் பந்த் - காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு!

author img

By

Published : Dec 8, 2020, 11:34 AM IST

காஞ்சிபுரம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து எதிர்க்கட்சிகள் பாரத் பந்திற்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

shops
shops

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று (டிச. 08) பாரத் பந்த் என்ற பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருந்தன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு, ராஜாஜி காய்கறிச் சந்தை, பூக்கடை சத்திரம், ஜவகர்லால் சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான கடைகளும் வியாபார நிறுவனங்களும் திறந்துவைக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டுவருகின்றன.

பாரத் பந்த் - காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு!

காஞ்சிபுரத்தில் முக்கிய வியாபாரப் பகுதியான காந்தி சாலையில் உள்ள பட்டுச் சேலை, ஜவுளிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் பேருந்துகளும் ஆட்டோக்களும் வழக்கம்போல இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எவ்வித பாதிப்புமின்றி இருந்தது.

இதையும் படிங்க: பாரத் பந்த் - பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.