ETV Bharat / state

தவறான சிகிச்சையால் தாய், சேய் உயிரிழப்பு! - சாலை மறியல்

author img

By

Published : Oct 31, 2020, 2:32 PM IST

கள்ளக்குறிச்சி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையில் தாயும், சேயும் உயிரிழந்ததால் மருத்துவர்களைப் பணிநீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

roko
roko

ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த அயல்துரையின் மனைவி கற்பகம், பிரசவத்திற்காக தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், தவறான சிகிச்சையால் சேய் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கற்பகமும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தாய், சேய் இறப்பிற்கு நியாயம் கேட்டும், தொடர்புள்ள மருத்துவர்களைப் பணிநீக்கம் செய்யக்கோரியும், உயிரிழந்த கற்பகத்தின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். இதனால் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தவறான சிகிச்சையால் தாய், சேய் உயிரிழப்பு! - சாலை மறியல்

இதையும் படிங்க: உதவிக்கு யாருமின்றி பறிபோன உயிர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.