ETV Bharat / state

எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி எம்.பி. கோரிக்கை

author img

By

Published : Dec 20, 2022, 5:43 PM IST

கச்சா எண்ணெய் விலை உலக அளவில் குறைந்து வருகிறது, எனவே எரிபொருள் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதம சிகாமணி நாடாளுமன்றத்தில் தமிழில் கோரிக்கை வைத்தார்.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி எம்.பி கோரிக்கை
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி எம்.பி கோரிக்கை

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்; கள்ளக்குறிச்சி எம்.பி கோரிக்கை

டெல்லி: இதுகுறித்து கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கெளதம சிகாமணி நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கையாவது,உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஜனவரி முதல் சரியத் தொடங்கியிருக்கிறது. அதுவும் இப்போது ஜூன் 22-ல் 116 டாலராக இருந்தது, தற்போது டிசம்பர் 22-ல் 75 டாலராக குறைந்துள்ளது. ‌ இது கிட்டத்தட்ட 35 சதவீதம் சரிவாகியுள்ளது. ஆனால் எரிபொருளின் விலை ஏற்றத்திலேயே உள்ளது.

பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதனால் மக்களுக்கு பயனும் சென்று அடையவில்லை. முந்தைய UPA (United Progressive Alliance) ஆட்சியில் கச்சா எண்ணைய் விலை ஒரு பீப்பாய் 111 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 71 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 57ஆகவும் இருந்தது. இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 86.91 ரூபாயாகவும் இருக்கும்பொழுது, தற்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 111, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய் 81ஆகவும் இருக்கின்றது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், வேலைவாய்ப்பின்மை மற்றும் பண வீக்கத்தால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதன் பயனெல்லாம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆனால், கச்சா எண்ணெய் விலை இவ்வளவு குறைந்த பிறகும் அரசாங்கமும், நிறுவனங்களும் எரிபொருளின் விலையைக் குறைக்கவில்லை.

இந்த எரிபொருளின் விலையின் ஏற்றத்தால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏற்றப்பட்டு மக்கள் அவதி அடைந்துள்ளார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டது போல் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விலையைக் குறைத்தார். ஆனால், கடந்த மூன்று நாட்களில் முன்பு நடந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அமைச்சர் பதில் அளிக்கும் பொழுது மாநில அரசாங்கம் மீது பழியை சுமத்தி விட்டு அவர்கள் தப்பிக்கத் தான் பார்க்கிறார்கள்’ என்றார்.

இதனால் உடனடியாக இந்த கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றார் போல் எரிபொருட்களின் விலையைக் குறைத்து இந்த பயன் எல்லா மக்களுக்கும் சென்றடைய செய்ய வேண்டும்‌ என கள்ளக்குறிச்சி எம்.பி. கௌதம சிகாமணி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இந்தியாவின் ஜிடிபியில் யூடியூபர்கள் சுமார் ரூ.10,000 கோடி பங்களிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.