ETV Bharat / state

குடிபோதை இளைஞரிடம் டைம்பாஸ் செய்த போலீஸ்

author img

By

Published : Mar 4, 2020, 1:15 PM IST

கள்ளக்குறிச்சி: குடிபோதையில் வாகனம் ஓட்டிவந்த நபரை ஆல்கஹால் அனலைசர் கருவியில் ஊதச் சொல்லி அதனைக் காணொலியாக எடுத்து காவல் துறையினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

kallakurichi
kallakurichi

கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மதுபோதையில் இருந்ததாகக் கூறி இளைஞர் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் குடித்து இருக்கிறாரா என்பதைச் சோதனை செய்ய ஆல்கஹால் அனலைசர் (Alcohol Analyzer) கருவியை அவரிடம் கொடுத்து ஊதச் சொல்லியுள்ளனர். பின்னர் அவரும் அதனை ஊதிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து அனலைசர் கருவியை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டு, வெறுமனே ஊதிக் காட்டும்படி அவரிடம் சொல்லியுள்ளனர். அவரும் அதற்கேற்றார்போல் மேலேயும் கீழேயும் பார்த்தவாறு ஊதி உள்ளார்.

குடிபோதை இளைஞரிடம் டைம்பாஸ் செய்த போலீஸ்

அப்போது நடந்த இந்த நிகழ்வை காவல் துறையினர் காணொலியாக எடுத்த சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தக் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: பைக்கில் நிற்காமல் சென்ற இளைஞர்களைத் தாக்கிய போலீஸ் - அதிரடி இடமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.