ETV Bharat / state

காதலிக்க மறுத்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: மிரட்டல் இளைஞர் கைது

author img

By

Published : Mar 27, 2022, 6:33 PM IST

காதலிக்க மறுத்ததால் 15 வயது சிறுமியின் போட்டோகளை எடிட் செய்து நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: மிரட்டிய இளைஞர் கைது
காதலிக்க மறுத்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: மிரட்டிய இளைஞர் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், இவர் தனது குடும்பத்துடன் விவசாயம் மற்றும் காளான்பண்ணை வைத்து தொழில் செய்துவருகிறார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இந்நிலையில் கோரமடை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கூட்டுறவு பால் பண்ணைக்கு பால் ஊற்ற செல்லும்போது தினந்தோறும் நந்தகுமார் சிறுமியைப் பின் தொடர்ந்து தான் வைத்திருக்கும் செல்போன் மூலம் தொடர்ந்து படம் எடுத்து வருவதாகவும், சிறுமி சைக்கிளில் பால் கொண்டு சென்று பாலை ஊற்றிவிட்டு திரும்ப தனது வீட்டிற்கு செல்லும் வழியில் தனது இருசக்கர வாகனத்தில் மேலே விடுவது போல பயமுறுத்தியும், சிறுமியை வழிமறித்து தான் உன்னை காதலிக்கிறேன் நீயும் என்னை காதலிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியும், நான் கூப்பிடும் போது என்னுடன் வரவேண்டும் இல்லையென்றால் உன்னை வாழ விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

போக்சோ சட்டத்தின் கீழ் கைது: மேலும், நான் சொல்லுவதை கேட்காவிட்டால் உன் போட்டோக்களை எடிட் செய்து தன் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும், இது குறித்து பெற்றோரிடம் கூறினாள் உன்னையும், பெற்றோரையும் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து சிறுமி தான் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த வந்த ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:'உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும்' - மதுரை மாமன்ற உறுப்பினர் விஜயா வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.