ETV Bharat / state

மக்காச்சோளத்தில் படைப்புழு: கட்டுப்படுத்தும் மருந்து தெளிப்பின் செயல்விளக்கம்!

author img

By

Published : Nov 5, 2019, 5:56 PM IST

ஈரோடு: மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்பதுத்தும் மருந்து தெளிப்பு குறித்தான செயல்விளக்கம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர் விவசாயிகளுக்கு வேளாண்துறை அலுவலர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

process of spraying Pharmacies in maize

தமிழ்நாட்டில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு என்ற புழு தாக்கியதில் கடந்தாண்டு விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்புழு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தாகவும் இதனை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மக்காச்சோளம் பயிர் செய்திருந்த விவசாயிகள் மிகவும் கவலையுற்றிருந்தனர்.இந்தச்சூழலில் தமிழ்நாடு அரசு மக்காசோளத்தைத் தாக்கி அழிக்கும் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதன்படி தற்போது படைப்புழுவை கட்டுப்படுத்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த படைப்புழுவை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாகத் தமிழ்நாடு அரசு, ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்தும் மருந்து தெளிக்கும் முறை

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு படைப்புழுவை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை இலவசமாக வழங்குவதோடு, மருந்து தெளிக்க பயன்படுத்தும் தெளிப்பான் மற்றும் ஆள் கூலி ஆகியவற்றையும் வழங்கிவருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர் கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளத்தை தாக்கியுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயல்முறை விளக்கம் வேளாண்துறையின் சார்பில் அப்பகுதி விவசாயிகளுக்குச் செய்து காண்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர் திருச்சி சிறையில் உண்ணாவிரதம்!

Intro:Body:tn_erd_03_sathy_makkacholam_vis_tn10009

மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்தும் மருந்து தெளிப்பு செயல்விளக்கம்


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கிராமத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மக்காசோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்பதுத்துவது குறித்து மருந்து தெளித்து செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர். இதை மாநில வேளாண்மை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்…


தமிழகத்தில் மக்காசோளப்பயிரில் படைப்புழு என்ற புழு தாக்கி கடந்தாண்டுகளில் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இப்புழு அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தாகவும் இதனை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசு தெரிவித்து வந்த நிலையில் மக்காசோளம் பயிர் செய்திருந்த விவசாயிகள் மிகவும் கவலையுற்றிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு மக்காசோளத்தை தாக்கி அழிக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு அப்புழுவை கட்டுப்படுத்த புதிய பூச்சிக்கொல்லி மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த படைப்புழுவை தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு ஒட்டுமொத்த பரப்பில் பயிர்பாதுகாப்பு மருந்து தெளித்தல் என்ற திட்டத்தை உருவாக்கி மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு படைப்புழுவை கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை இலவசமாக வழங்கி மருந்து தெளிக்க பயன்படுத்தும் தெளிப்பான் மற்றும் ஆள் கூலி ஆகியவற்றை வழங்கிவருகிறது. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 185 ஹெக்டேர் நிலங்களில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 35 ஹெக்டேர் நிலங்களில் படைப்புழு தாக்குதல் உள்ளது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோளத்தை தாக்கியுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்தும் செயல்முறை விளக்கம் வேளாண்மைத்துiயின் சார்பில் இப்பகுதி விவசாயிகளுக்கு செய்துகாண்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்து அதிகாரிகளும் மக்காசோளத்தில் பரவியிருந்த படைப்புழுக்களை ஆய்வு செய்து அதற்கு எவ்வகையான மருந்து தெளிக்கவேண்டும் என முடிவு செய்து கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.