ETV Bharat / state

'ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் வேட்டி, சேலைகள் வழங்கப்படும்' - அமைச்சர் காந்தி அறிவிப்பு!

author img

By

Published : Jul 24, 2023, 10:59 PM IST

ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் வேட்டி, சேலைகள் மக்களுக்கு வழங்கும் பணி தொடங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி

ஈரோட்டு சித்தோடு டெக்ஸ் வேலி ஜவுளி வணிக வளாகத்தில் நடந்த ஜவுளி கண்காட்சியை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் அமைச்சர் முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மேலும் ஜவுளி கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு கடைகளாக சென்று பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, விலையில்லா வேட்டி, சேலைகளுக்கான ஒப்பந்தம் இறுதி நிலையில் இருப்பதாகவும், இம்மாதம் இறுதிக்குள் ஒப்பந்தத்தை ஒப்படப்பதை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் விலையில்லா வேட்டி சேலைகளுக்கான தயாரிப்பு துவங்க நூல்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் பொங்கல் வேட்டி, சேலைகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு விலையில்லா வேட்டி சேலை வழங்க தாமதம் ஆகாமல், முன்னதாகவே விலையில்லா வேட்டி சேலை தயாரித்து உறிய நேரத்தில் வழங்கப்படும் என்றும், வேட்டி சேலைகள் தயாரிக்கப்படும் நூல்கள் எந்த குறையுமின்றி நல்ல தரத்தில் இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு புதிய தார் சாலை! விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி!

கைதறிக்கும், நெசவாலர்களுக்கும் திமுகவை தவிர வேறு எந்த ஆட்சியும் முக்கியத்துவம் வழங்கியதே கிடையாது. மேலும் கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் வைத்திருந்த 148 கோடி ரூபாய் நிலுவை கடனை முழுவதுமாக அடைத்துள்ளோம். என்று கூறினார். தொடர்ந்து பாசிய கைதறி துறை அமைச்சர் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி, கூட்டுறவு சங்கத்தின் துணை இயக்குநரின் சம்பலத்தை கடந்த மூன்று மாதங்களாக அரசே பொறுப்பேற்று வழங்கி வருவதாகவும் கூறினார்.

விலையில்லா வேட்டி, சேலைக்கு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மேல் நூல்கள் வழங்கப்படும் என்றும், நெசவு தொழிலில் இளைஞர்களை ஊக்குவிக்க ஆட்சிக்கு வந்த பிறகு கைத்தறி தொழிலின் கூழியை 10 விழுக்காடு உயர்த்தி கொடுத்துள்ளதாகவும் கூழியை இன்னும் 10 சதவிதம் உயர்துவதற்காக முதலமைச்சரோடு ஆலோசித்து வருவதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க: Parliament Election 2024: வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை! திமுகவில் சூடு பறக்கும் தேர்தல் பணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.