ETV Bharat / state

ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு...! ரியல் எஸ்டேட் அதிபர் கைது...

author img

By

Published : Mar 13, 2022, 11:48 AM IST

ஈரோட்டில் ஆள்மாறாட்டம் செய்து நிலம் அபகரிப்பில் ஈடுபட்ட, ரியல் எஸ்டேட் அதிபரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

land scam in erode  erode land scam  real estate man arrested in erode for land scam  land grabbing  Impersonation and land grabbing  ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு  ஈரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது  ரியல் எஸ்டேட் அதிபர் கைது  ஈரோட்டில் நில அபகரிப்பில் ஈடுபட்டவர் கைது
ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு

ஈரோடு: சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவருக்கு ஈரோடு அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில், சொந்தமான நிலம் உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு, கண்ணம்மாள் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஈரோடு ராஜீவ் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மூர்த்திக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கிடையே மூர்த்தி, கண்ணம்மாளுக்கு சொந்தமான மற்றொரு ஒரு ஏக்கர் நிலத்தையும் ஆள் மாறாட்டம் செய்து அவரது பெயருக்கு கிரையம் செய்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு கண்ணம்மாள் தனக்கு சொந்தமாக மீதம் உள்ள நிலம் தொடர்பாக வில்லங்க சான்றிதழ் பெற்றுள்ளார். அதில், மூர்த்திக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலம் போக, மேலும் ஒரு ஏக்கர் நிலம் மூர்த்தி பெயரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு கண்ணம்மாள் ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், ரியல் எஸ்டேட் அதிபர் மூர்த்தி ஆள் மாறாட்டம் செய்து கண்ணம்மாளுக்கு சொந்தமான மற்றொரு ஏக்கர் நிலத்தை மோசடியாக கிரையம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மூர்த்தி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 2k காதலை கண்டித்த தந்தை... எரித்து கொன்ற மகளின் காதலன்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.