ETV Bharat / state

'ஆபத்தான பள்ளிக்கட்டிடம்' 'பழுதடைந்த கழிப்பறை' - சீரமைக்க கோரிக்கை!

author img

By

Published : Feb 11, 2020, 10:33 AM IST

ஈரோடு: ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் செயல்படாத பள்ளிக்கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது குழந்தைகளுக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை
கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பண்ணாரி கோவில் நிர்வாகம் சார்பில் கருணை இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற 35 குழந்தைகள் அவர்கள் கல்வியை தொடருவதற்காக கோவில் வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்காக 1973ஆம் ஆண்டு கட்டப்பட்ட இரு கட்டடங்கள் உள்ளன.

ஆனால், ஒரு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து பழுதடைந்ததால் அதனருகே உள்ள மற்றொரு கான்கிரீட் கட்டடத்தில் பல நாள்களாக பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இடியும் நிலையில் உள்ள கட்டடத்தின் அருகில் குழந்தைகள் செல்வது, விளையாடுவது ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி 20 பெண் குழந்தைகள் பயிலும் இப்பள்ளியில் கழிவறையும் உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும் மாறிவிடுகிறது. எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சிதலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி புதியதாக கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

துவக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், "பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்துள்ளோம், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பள்ளியில் மகனுக்கு சீட் கேட்டதில் தகராறு - தந்தை தற்கொலை முயற்சி!

Intro:Body:tn_erd_01_sathy_school_damages_vis_tn10009

இடிந்து விழும் நிலையில்
பண்ணாரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம்

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவில் வளாகத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் செயல்படாத ஓர் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனருகே குழந்தைகள் விளையாடுவதால் ஆபத்து நிகழும் முன் சிதலமடைந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் நிர்வாகம் சார்பில் கருணை இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள 35 குழந்தைகள் பண்ணாரி கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டு அவர்கள் கல்வியை தொடர கோவில் வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 1973ம் ஆண்டு கட்டப்பட்ட ஈராசிரயர் பள்ளியான இங்கு, இரு கட்டடங்கள் உள்ளன.
கட்டடங்களில் ஒன்று மேற்கூரை இடிந்து பழுதடைந்தால் அதனருகே உள்ள மற்றொரு கான்கிரீட் கட்டடத்தில் பள்ளி இயங்குகிறது. பள்ளி வகுப்பறையின் இடது புறத்தில் சிதலமடைந்த கட்டடம் எப்போது விழும் என்ற நிலையில் நீண்ட நாள்களாக காணப்படுகிறது. சிதலமடைந்த கட்டடத்தின் முன்புறம் வழியாக குழந்தைகள் விளையாடுவதால் சூறைக்காற்று வீசும் போது குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வனத்தில் இருந்து வரும் குரங்குகள் மேற்கூரை ஓட்டை பிரித்து வீசுகின்றன.இதனால் குழந்தைகள் வளாகத்தில் அச்சத்துடன் செல்கின்றனர். 20 பெண் குழந்தைகள் உள்ள இப்பள்ளியில் கழிவறையும் செயல்படுவதில்லை. மேலும் இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும் மாறிவிடுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி சிதலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்துள்ளோம், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

--Conclusion:பேட்டி: நட்ராஜ், சத்தியமங்கலம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.