ETV Bharat / state

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையம்; கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்த அமைச்சர் உதயநிதி.. பொதுமக்களைச் சந்திக்காததால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 10:46 AM IST

Perundurai SIPCOT: பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

ஈரோடு: பெருந்துறை அருகே சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, சிப்காட் தொழிற்பேட்டை. அந்த தொழிற்சாலை வளாகத்தில் சாய தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், மாட்டுத்தீவன தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை கண்ணாடி தயாரிப்பு தொழிற்சாலைகள், இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட சாயம், தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரானது சுத்திகரிக்கப்படமால் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நீரைப் பயன்படுத்திய பொதுமக்கள் புற்று நோய், எலும்பு தேய்மானம், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்படைந்துள்ளதாகவும், மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், அப்பகுதியில் உள்ள குளங்களுக்குச் செல்லும் நீரோடைகளும், குளங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் அளிக்கின்றனர்.

இதனை எதிர்த்து, அப்பகுதி மக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, ஆலை நிர்வாகம் மறுசுழற்சி செய்து வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்பகுதியில் இருக்கும் ஆலைகள் தொடர்ச்சியாக சாயக் கழிவு நீரை, நீரோடைகளில் வெளியேற்றுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதன் பின்னர், அப்பகுதி மக்கள் பல்வேறு குழுவாகப் பிரிந்து, கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகளைக் கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு, இதுவரை 6 ஆலைகளுக்கு சீல் வைத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆலை நிர்வாகம் மற்றும் அரசு இணைந்து 40 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியீட்டு விழாவில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற இந்த அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இத்திட்டத்திற்கான அறிவிப்பை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிப்காட் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் பிர்.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் முத்துசாமி பதிலளிக்கும்போது, சிப்காட் தொடர்புடைய கேள்விகளை மட்டும் கேட்குமாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அத்திட்டம் சார்ந்த கேள்விகள் கேட்ட போதும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கவில்லை. மாறாக அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் பதிலளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் முத்துசாமி, நிலத்தடி நீர், குளங்கள் சுத்திகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விளக்கி கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், சிப்காட் பகுதிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, வளாகம் முழுவதும் அதிக அளவிலான மரங்கள் நடப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே, பாதிக்கப்பட்டு போராடி வரும் மக்களை அமைச்சர் உதயநிதி சந்தித்து பேசுவோர் என காத்திருந்து நிலையில், ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்காமல் சென்றது, அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நிகழ்ச்சி முடிந்தவுடன் அதிகாரிகள் மற்றும் ஆலை உரியமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சர் உதயநிதி தங்களைச் சந்திக்காமல் போனது பெரும் ஏமாற்றும் அளிப்பதாகவும், ஒரு அரசு விழா அரசியல் கட்சி விழாவைப் போல் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டிய அவர்கள், சாயக் கழிவுகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.