ETV Bharat / state

தேர்தல் அட்டவணை வெளியான பிறகே பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்

author img

By

Published : Jan 13, 2021, 12:26 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Minister Sengottayan said the decision regarding the public exams will be taken after the release of the election schedule
Minister Sengottayan said the decision regarding the public exams will be taken after the release of the election schedule

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூரில் நடைபெற்ற அரசு விழாவில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் கறவைமாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (ஜன. 12) 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதார துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் பள்ளிகள் செயல்படுத்தும். இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகே மாணவர்களுக்கான தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்களாம். கட்டாய கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும்போது பெற்றோர்கள் கண்காணிக்கலாம்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆறாயிரத்து 29 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்பது ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம். ஊட்டச்சத்துடன் மதிய உணவு வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.