ETV Bharat / state

நரபலி வழக்கு: ஐந்து பேர் கைது

author img

By

Published : Apr 21, 2021, 1:10 AM IST

ஈரோடு: பரபரப்பை ஏற்படுத்திய நரபலி புகாரில் வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அஃப்ச்ட்
ட்ஃபச்

ஈரோடு ரங்கம்பாளயத்தைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரியான ராமலிங்கம். இவரது மகன்களான தீபக் ( 15 ) மற்றும் கிஷாந்த் ( 6 ) ஆகிய இருவரும் கடந்த 13ஆம் தேதி தனது தாத்தா மற்றும் பாட்டி உதவியுடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையை சந்தித்து புகார் அளித்தனர்.

அதில் தனது தந்தை ராமலிங்கம் இரண்டாவது திருமணம்கொண்டு தனது தாய் ரஞ்சிதா மற்றும் இரண்டாவது மனைவி இந்துமதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசிந்து வந்தார். தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவர் தங்களை கொடுமைப்படுத்தி வருகிறார்.

சிறுவர்களான எங்களை படிக்கவிடாமல், வீட்டு வேலைகளை செய்ய வைத்தும், குறிப்பிட்ட நேரத்தில் வேலைகளை செய்து முடிக்காவிட்டால் பாத்ரூம் கழுவும் கிருமி நாசினியை குடிக்க வைத்தும் , சாப்பிட்டதுடன் மிளகாய் பொடி கலந்து சாப்பாடு கொடுத்தாகவும் , பாத்ரூமில் தூங்க வைக்கிறார். எங்கள் தாய் ரஞ்சிதா சக்தி எனவும், தாயின் தோழி தனலட்சுமி சிவன் எனவும் கூறி தங்களை நரபலி கொடுக்கப்போவதாக மிரட்டுகிறார்.

இதனால் பயந்து போன நாங்கள் வீட்டிலுருந்து வெளியேறி எங்களது தாத்தா, பாட்டி உதவியுடன் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, புகாரின்படி ஈரோடு மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய நால்வர் மற்றும் அவர்களுக்கு தங்குவதற்கு இடமளித்த மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் ஏழு நாட்களுக்குள் வழக்கில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.