ETV Bharat / state

கீழ்பவானி கால்வாய் உடைபால் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு!

author img

By

Published : Dec 11, 2022, 5:11 PM IST

பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், விளைநிலங்களுக்குள் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கீழ்பவானி கால்வாயில் உடைப்பு
கீழ்பவானி கால்வாயில் உடைப்பு

ஈரோடு: பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாயில் கரைகள் உடைந்ததால், நீர் விளைநிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசனத்திற்கு நீர் பெற்று வருகிறது.

இந்நிலையில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் துறை சார்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வலையில், ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் கீழ்பவானி கால்வாயில் மழை நீர் நிரம்பியது. அதில், கால்வாயின் இரண்டு கரைகளும் உடைந்து, விளைநிலங்களில் நீர் புகுந்தது. இதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

மேலும் பாலப்பாலையம், சின்னியம்பாளையம், கூறபாளையம், மூலகரை, கதிரம்பட்டி, நஞ்சனாபுறம் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விளைநிலங்களில் நீர் புகுந்துள்ளது. ஆங்காங்கே மின் கம்பங்களும் சாய்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சென்று முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் பவானிசாகர் அணையிலிருந்து கால்வாயில் விநாடிக்கு 1300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.

விளைநிலங்களை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், விவசாயிகளும் கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வடிந்த பிறகு உடைப்பு சீரமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பழவாற்றில் வெளியாகும் நீரால் மக்கள் அவதி - தடுப்பு சுவர் கேட்டு மக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.