ETV Bharat / state

ஈரோட்டில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் சங்கமம் - தேர்தல் ஆலோசனை தீவிரம்

author img

By

Published : Jan 28, 2023, 5:21 PM IST

மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக திமுகவின் முக்கிய அமைச்சர்கள் ஈரோட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அதிமுகவின் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், எடப்பாடி பழனிசாமியும் அங்கு ஈரோட்டில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, கே.என். நேரு உள்ளிட்டவர்கள் தலைமையில் மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.28) நடைபெற்றது.

இதில், தேர்தல் பணிக் குழுவிற்கு மதச்சார்பற்ற கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்குப் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோரும் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர், திருமண மண்டபத்திலிருந்து அமைச்சர்கள் கிளம்பினர். அப்போது திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் கே.என்.நேரு, 5 மணிக்குத் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்வில் பேசுகின்றோம் எனக் கூறிச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் நேரு தலைமையில் பகுதி தேர்தல் அலுவலர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும்? என்பதை முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாகவும், வரும் பிப்.1 ஆம் தேதி செயல் வீரர் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வேட்புமனு தாக்கல் செய்வது எப்போது என்பதை முத்துசாமி மற்றும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகவும், வரும் பிப்.3ஆம் தேதி ஆக அது இருக்கலாம் எனவும் இது குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், எங்களை பொறுத்து வரையில் பணியைத் துவங்கி விட்டோம். மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமியின் ஈரோடு வருகை குறித்தும், அதிமுகவின் சார்பில் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்படாதது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் எடப்பாடியிலிருந்து ஈரோட்டிற்கு வந்து சென்று இருக்கின்றார் என்று தெரிவித்தார்.

வரும் பிப்.27 ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி, திமுகவின் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஈரோட்டில் சென்றுள்ளது அங்குத் தேர்தல் பிரச்சாரத்திலும் மேலும் சூடுபிடிக்க வைக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும், அதிமுகவினர் இதுவரையில் தங்களது வேட்பாளர் குறித்து அறிவிக்காத நிலை உள்ளது. அக்கட்சியினரின் வேட்பாளர் அறிமுகத்திற்குப் பின் மேலும் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

இதையும் படிங்க: Erode by poll: அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது - ஜி.கே.வாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.