ETV Bharat / state

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் உள்பட 700 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்!

author img

By

Published : Jul 9, 2023, 10:41 AM IST

Updated : Jul 9, 2023, 10:53 AM IST

700kg illegal drug seized in erode
கஞ்சா சாக்லேட் உட்பட 700 கிலோ போதைபொருட்கள் பறிமுதல்

ஈரோடு அருகே 501 கிலோ குட்கா, 240 கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் உள்பட 700 கிலோ போதைபொருட்கள் பறிமுதல்!

ஈரோடு : சித்தோடு பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்திய சோதனையில் கஞ்சா சாக்லேட் உள்பட குட்கா என சுமார் 700 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என் ஈரோடு காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது குடோனில் வட மாநில இளைஞர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்து அந்தக் காரை சோதனை செய்தபோது, அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் ஏற்றிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: இனி கஞ்சா விற்கமாட்டேன்.. பிரமாணப் பத்திரத்துடன் நிபந்தனை ஜாமீன் பெற்ற குற்றவாளி

பின்னர், காவல் துறையினரைக் கண்டதும் அந்த நபர் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் போதைப் பொருட்களை விற்றவர் பிருந்தா வீதியைச் சேர்ந்த தலராம் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாகக் கூறி குடோனை வாடகை எடுத்தது குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி, அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள தலராமனை தேடி வருகின்றனர். இந்த நிலையில், சித்தோடு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யபட்ட 501 கிலோ குட்கா மற்றும் 240 கிலோ கஞ்சா சாக்லேட்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் ஜவகர், “ஈரோடு மாவட்டம் முழுவதும் வேலைக்காக வரும் வட மாநிலத்தவர்களை, அவர்களை அழைத்து வரும் ஏஜெண்டுகள் மூலமாக அந்தந்த பகுதி காவல் துறையினர் கணக்கெடுப்பு செய்து கண்காணித்து வருகிறோம்.

மாவட்டம் முழுவதும் போதை மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறோம். தற்போது தப்பி ஓடிய வட மாநில குட்கா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனையாளர் தலராமை தனிப்படை காவல் துறையினர் கைது செய்த பின்புதான் இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது தெரிய வரும்” என கூறினார்.

இதையும் படிங்க: நண்பர்களுடன் தனிமையில் இருக்க வைத்து வீடியோ எடுத்த கணவர்.. காவல்துறையில் கண்ணீர் மல்க பெண் புகார்!

Last Updated :Jul 9, 2023, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.