ETV Bharat / state

Bus Issue: பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்களை இறக்கிவிட்ட அரசுப்பேருந்து நடத்துநர்

author img

By

Published : Dec 24, 2021, 9:50 PM IST

Bus Issue: ஈரோடு மாவட்டத்தில் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கான கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்களை இறக்கி விடும் அரசு பேருந்து நடத்துநர்
பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்களை இறக்கி விடும் அரசு பேருந்து நடத்துநர்

ஈரோடு:Bus Issue: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயில்கின்றனர்.

இவர்கள் காலை, மாலை நேரங்களில் அரசுப்பேருந்துகளை நம்பியே பயணிக்கின்றனர்.

சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுவதால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் வாரச்சந்தையில் இருந்து, பேருந்து நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் பேருந்தில் கிராமத்துக்கு திரும்புவர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் என்பதால் பேருந்தில் ஏறிச் செல்லும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று (டிச.24) பள்ளி முடிந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக வாரச்சந்தை முன் நின்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த டவுன் பஸ்ஸில் மாணவர்கள் ஏறியபோது, ஒரு சில மாணவர்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு, 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.

மாலை நேரங்களில் ஓரிரு பேருந்துகள் மட்டுமே அவ்வழியாக வருகின்றன.

பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்களை இறக்கி விடும் அரசுப் பேருந்து நடத்துநர்

ஒரு சில மாணவர்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு, பெரும்பாலான மாணவர்கள் ஏற்றாமல் செல்வதால், அவர்கள் நடந்து 2 கி.மீ., தூரமுள்ள பேருந்து நிலையம் செல்வதற்குள், அவர்கள் பயணிக்க வேண்டிய கிராமத்துக்குச் செல்லும் பேருந்துள் சென்றுவிடுன்றன.

இதனால் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கான கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள்
பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள்

இதையும் படிங்க: Teacher suspended: மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.