ETV Bharat / state

யானைகளின் தொடர் அட்டகாசம்: விவசாயி உயிரிழப்பு

author img

By

Published : Jan 3, 2021, 1:18 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தோட்டத்திற்கு இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி ஒருவர், யானை மிதித்து உயிரிழந்தார்.

Farmer killed by elephant
elephant trampling

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சின்னார்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரி (56). இவருடைய மக்காச்சோள தோட்டத்தில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததுள்ளன. இதனால், நேற்று (ஜன.02) இரவு தோட்டத்திற்கு காவல் பணிக்கு சென்ற மாரி, யானைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி உயிரிழப்பு

அப்பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் 5 வருடங்களாக அலைகழிக்கப்படும் குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.