ETV Bharat / state

ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!

author img

By

Published : Jan 24, 2020, 12:04 PM IST

ஈரோடு: மஞ்சள் விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

erode-termeric-farmers
erode-termeric-farmers

ஈரோடு மாவட்ட விவசாயிகள் பரவலாக மஞ்சள் பயிரிட்டு வந்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் நேரடியாக ஈரோடு வந்து தங்களுக்குத் தேவையான மஞ்சளைக் கொள்முதல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் விலை கிடைத்ததால், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மஞ்சள் பயிரை வழக்கத்தை விட அதிகளவில் பயிரிட்டனர். இதனிடையே ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் விதை மஞ்சளைப் பெற்று தங்களது மாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடம்

அங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்ட மஞ்சளுக்குரிய விலை கிடைக்காமல் போனது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சளைப் பயிரிட்ட விவசாயிகள் சாகுபடிக்காக பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், மஞ்சள் விளைச்சலை எடுக்க முடியாமலும் தற்கொலையில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு இறுதி முதல் தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்ததையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் மஞ்சளுக்குரிய விலை கிடைக்காமல் குவிண்டாலுக்கு மிகக் குறைவான விலையே கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மஞ்சள் வியாபாரிகள் கோரிக்கை

எனவே, மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்க ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடத்தை அமைக்க வேண்டும் எனவும், மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டால் நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் மஞ்சள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வீடு வீடாகச் சென்று 'இருளர்' சான்று வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன23

ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடத்தை அமைத்திட வேண்டும் - மஞ்சள் வியாபாரிகள் கோரிக்கை!

ஈரோடு: மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்திட ஒருங்கிணைந்த மஞ்சள் விற்பனைக் கூடத்தை அமைத்திட வேண்டும் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டால் நல்ல விலை கிடைக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான அனுமதியை மத்திய,மாநில அரசுகள் வழங்கி மஞ்சள் விவசாயிகளை காப்பாற்றிட வேண்டும் என்று மஞ்சள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஈரோட்டு மஞ்சள் கடந்த 40 ஆண்டுகளாக காலிங்கராயன் கால்வாய் பாசனம் அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் பவானியில் தொடங்கி கொடுமுடி வரையிலான 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களிலும், கீழ்பவானி பாசன கால்வாய்க்குட்பட்ட இரண்டு போக பாசனத்திலும் சேர்த்து மொத்தமாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களிலும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய் பாசனத்திற்குட்பட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களிலும் ஏனைய பயிர்களையும் பயிரிட்டு வந்த விவசாயிகள் பரவலாக மஞ்சளையும் பயிரிட்டு வந்தனர்.

இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் நேரடியாக ஈரோடு வந்து தங்களுக்குத் தேவையான மஞ்சளைக் கொள்முதல் செய்தனர்.. இதன் காரணமாக மஞ்சளுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் 1 குவிண்டாலுக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் என்கிற நல்ல விலை கிடைத்தன் காரணமாக மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மஞ்சள் பயிரை வழக்கத்தை விடவும் அதிகளவில் பயிரிட்டனர். இதனிடையே ஆந்திரா, கர்நாடகம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் விதை மஞ்சளைப் பெற்றுச் சென்று தங்களது மாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டனர்.

அங்கு பயிரிடப்பட்ட மஞ்சள் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு மாவட்ட மஞ்சளுக்குரிய விலை கிடைக்காமல் போனது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சளைப் பயிரிட்ட விவசாயிகள் சாகுபடிக்காக பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், மஞ்சள் விளைச்சலை எடுக்க முடியாமலும் தற்கொலையில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு இறுதி முதல் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்ததால் ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி இருப்பதால் மாவட்டம் முழுவதும் பரவலாக மஞ்சள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் மஞ்சளுக்குரிய விலை கிடைக்காமல் குவிண்டாலுக்கு மிகக் குறைவான விலையே கிடைத்து வருவதால் மஞ்சள் விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Body:மஞ்சளுக்கான விலையை நிர்ணயித்திட வேண்டும், மஞ்சள் விற்பனைக்கான ஒருங்கிணைந்த விற்பனைக் கூடத்தை அமைத்து ஒரே விலை கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். Conclusion:மஞ்சள் விவசாயிகளையும், மஞ்சள் விவசாயத்தையும் பாதுகாத்திட மஞ்சளுக்கு கட்டுப்படியாகிற விலையை அரசுகள் நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும், ஏற்றுமதிக்கான அனுமதியை வழங்கிட வேண்டும் என்றும் மஞ்சள் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பேட்டி : வி.எம்.வேலாயுதம் – தலைவர், காலிங்கராயன் கால்வாய் பாசன சபை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.