ETV Bharat / state

தமிழர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு குரல் கொடுக்கப்படும் - சுப்பராயன்

author img

By

Published : Jun 1, 2019, 2:13 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

File pic

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் அதிமுக வேட்பாளர் ஆனந்தனைவிட 93 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற பாஜகவின் நடவடிக்கையால் வேலையின்மை, தொழில் முடக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளை தமிழ்நாடு சந்தித்துவருகிறது.

சுப்பராயன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட்தேர்வு, எட்டு வழிச்சாலை, விளைநிலங்கள வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பபடும். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஈரோடு 01.06.19
சதாசிவம்
                                                                    தமிழகத்தில் மக்களை பாதிக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கப்படும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் தெரிவித்துள்ளார்....                                                                       
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் அதிமுக வேட்பாளர் ஆனந்தனை விட 93 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்..இந்நிலையில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பராயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி, பணபதிப்பிழப்பு போன்ற பாரதிய ஜனனதா கட்சியின் நடவடிக்கையால் வேலையின்மை, தொழில் முடக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளை தமிழகம் சந்தித்து வருவதாக கூறிய சுப்பராயன், தமிழகத்தில் மக்களை பாதிக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட்தேர்வு, 8வழிச்சாலை, விளைநிலங்கள வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பபடும் என்றார்..கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என குற்றம்சாட்டிய அவர், திருப்பூரில் செயல்படும் சாய, சலவை ஆலைகளால் ஒரத்துபாளையம் அணை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்..தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்..

Visual send mojo app
File name:TN_ERD_01_01_MP_PRESS_MEET_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.