ETV Bharat / state

கொடைக்கானலில் பாலியல் தொழில்: 6 இளம்பெண்கள் மீட்பு

author img

By

Published : Jan 20, 2020, 3:19 PM IST

Updated : Jan 20, 2020, 7:25 PM IST

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் எப்போதும் குளுமையாகக் காணப்படும் கொடைக்கானலில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பெண்கள் காவலர்களால் மீட்கப்பட்டு மகளிர் நலவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

kodaikanal prostitution
kodaikanal prostitution

குளு குளு குடில்

நாகை மாவட்டம் சீர்காழிப் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தங்குவதற்காக அறைகள் தேடியபோது அவர்களை அணுகிய நபர் ஒருவர் தன்னிடம் குறைந்த விலையில் அறைகள் வாடகைக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.

அவர்களை நகரையடுத்துள்ள அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியில் உள்ள குறைந்த விலையிலான குளு குளு குடிலுக்கு (காட்டேஜ்) அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற பிரேம்குமார், பின்னர் கொடைக்கானல் காவலர்களிடம் தான் தங்கியிருந்த குடிலில் இளம்பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனர் என்று புகார் அளித்துள்ளார்

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்கள் மீட்பு

6 இளம்பெண்கள்

இதனடிப்படையில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மோகன் ராஜா (40) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், வடமாநிலங்களைச் சேர்ந்த ஆறு இளம்பெண்கள் அந்தக் குளு குளு குடிலில் இருப்பதும் அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

மகளிர் நலவாழ்வு மையம்

இதனையடுத்து அவரைக் கைதுசெய்த காவலர்கள், அங்கிருந்த வடமாநிலங்களைச் சேர்ந்த ஆறு இளம்பெண்களை மீட்டு மகளிர் நலவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்திய கார், நான்கு செல்போன்களையும் கைப்பற்றி, தப்பியோடிய திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன், நாயுடுபுரத்தைச் சேரந்த கோசலை ராமன் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞர் - போக்சோவில் கைது!

Intro:திண்டுக்கல் 20.1.20

கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணிகளை தவறாக வழிநடத்திய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Body:நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் தங்குவதற்காக அறைகள் தேடிய பொழுது அவர்களை அணுகிய ஒருவர் தன்னிடம் குறைந்த விலையில் அறைகள் வாடகைக்கு இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவர்களை நகரை அடுத்துள்ள அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியில் உள்ள ஒரு காட்டேஜிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற பிரேம்குமார் இளம் பெண்களை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்த கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சப் இன்ஸ்பெக்டர் காதர் மைதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுக்ஷமோகன் ராஜா (40) என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அங்கு வட மாநில இளம் பெண்கள் 6 பேர் இருப்பதாகவும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலிசார் தப்பி ஓடிய திண்டுக்கல் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த ஸ்டீபன், நாயுடு புரத்தைச் சேர்ந்த கோசலை ராமன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் அங்கு இருந்த 6 வடமாநில இளம் பெண்களை மகளிர் நலவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்த போலிசார், விபச்சாரத்திற்கு பயன்படுத்திய காரினையும் 4 செல்போன்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.Conclusion:
Last Updated :Jan 20, 2020, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.