ETV Bharat / state

கனமழை எதிரொலி - கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்!

author img

By

Published : Nov 18, 2021, 6:50 PM IST

கனமழை காரணமாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: கொடைக்கானலில் (Kodaikanal)கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. பகல், இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு (Tamilnadu Government) சார்பில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாளை (நவ.19) கனமழை எதிரொலி காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான பைன் மரக்காடுகள், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் மூடப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார்'- கொதிக்கும் அர்ஜுன் சம்பத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.