ETV Bharat / state

எல்லை வரை மட்டுமே இயங்கும் திண்டுக்கல் பேருந்துகள்!

author img

By

Published : Jun 24, 2020, 7:19 AM IST

திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மதுரை சென்றுவந்த பேருந்துகள் திண்டுக்கல் எல்லை வரை மட்டுமே இயக்க போக்குவரத்து மண்டல நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையம்
திண்டுக்கல் பேருந்து நிலையம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்ளடக்கியது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பின் போக்குவரத்து தொடங்கியபோது, திண்டுக்கல் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் பகுதிகளுக்குச் சென்றுவந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்றுமுதல் வரும் ஜூன் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மண்டலத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள், மதுரை எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொடை ரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல தேனி மாவட்ட பகுதிகளிலிருந்து நிலக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் செக்கானூரணி வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நத்தம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் கடவூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேருந்துகாக காத்திருக்கும் மக்கள்
பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள்
இதனிடையே நேற்று மாலைமுதல் மதுரை செல்ல பேருந்து இல்லாததன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காகக் காத்திருந்தனர்.
இதையடுத்து காவல் துறையினர், போக்குவரத்துத் துறையினரிடம் ஆலோசித்து கூடுதல் பேருந்துக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மக்கள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.


இதையும் படிங்க: பொதுமக்கள் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டாம் - காவல் கண்காணிப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.