ETV Bharat / state

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆபத்தான பயணம்

author img

By

Published : Jan 20, 2021, 11:48 AM IST

திண்டுக்கல்: தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆபத்தான முறையில் உறவினர்கள் ஆற்றினை கடந்து சென்றனர்.

உடலை அடக்கம் செய்ய ஆபத்தான பயணம்
உடலை அடக்கம் செய்ய ஆபத்தான பயணம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளளவையும் எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

அப்போது குதிரையாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லக்கூடிய தரை பாலத்தை அடித்து சென்றது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் அளவு குறையாததால் பாலத்தை சரி செய்ய முடியவில்லை என பொதுப்பணித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலை அடக்கம் செய்ய ஆபத்தான பயணம்

இதனிடையே அப்பகுதியில் இறந்தவரின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதற்கு ஆபத்தான முறையில் உறவினர்கள் ஆற்றினை கடந்து சென்றனர்.

இதையும் படிங்க: இறந்தவரின் உடலை தெப்பக்கட்டை மூலம் ஆற்றைக் கடந்து கொண்டுவந்த உறவினர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.