ETV Bharat / state

பிஏ 4, பிஏ 5 ஒமைக்ரான் பாதிக்கப்பட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Jun 11, 2022, 9:43 PM IST

தமிழகத்தில் தற்போது பரவும் பிஏ4, பி.ஏ.5 ஆகிய ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என கண்டறியப்பட்டுள்ளதாகவும் , இந்த வகை கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். என சுகாதாரத்துறை அமைச்சர், மா. சுப்பிரமணியன் தெரிவிதுள்ளார்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

திண்டுக்கல்: பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவிற்கான புதிய கட்டிடத்தையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூன் 11) திறந்துவைத்தார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த அவர், "மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு உதவிகள், காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிடி ஸ்கேன் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கொடைக்கானல் நகர்புற சுகாதார மையம் மேம்படுத்துவதற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானல் மலைப்பகுதி பண்ணைக்காடு அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்டி மேம்படுத்துவதற்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழனி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக ஆக்கப்பட உள்ளது. இதற்கு ஏற்கனவே 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 69 கோடியே 96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 124 கோடியே 98 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மா. சுப்பிரமணியன்

பள்ளிகள் தொடங்குவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 64 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குரங்கு அம்மை நோய் காரணமாக 22 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சுற்றுலா பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள். அவர்களது உடல்களில் சிறு தழும்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் தற்போது பரவிவரும் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வகை ஓமிக்ரோன் கரோனா தொற்று வேகமாக பரவக்கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதி கண்காணிக்கப்படும். தமிழ்நாட்டில் நோய்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலில் விபத்து சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர்.

வெளிநாடு குறிப்பாக உக்ரைன் நாட்டில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ மேல்படிப்புக்கும் பணிக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது பணியில் உள்ள 10 ஆயிரம் செவிலியர்கள் படிப்படியாக காலமுறை ஊதியத்தில் இருந்து நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா... முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.