ETV Bharat / state

Dindigul - விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு

author img

By

Published : Jul 25, 2023, 8:15 PM IST

திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலையில் சுத்திகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே தோல் தொழிற்சாலையில் சுத்திகரிப்புத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரண்டு வட மாநில இளைஞர் உட்பட மூன்று பேர் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சாலையில் உள்ள குட்டியபட்டி, பொண்ணுமாந்துறை, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் வேலை செய்து வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இதனிடையே, அங்குள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் வட இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சேலத்தில் உச்சத்தை தொட்ட காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் - பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்டதால் நிர்வாகிகள் வேதனை!

இந்த நிலையில், பொண்ணுமாந்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று (ஜூலை 25) பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதற்கிடையே அங்குள்ள தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த ஹாசன், சுமன் ஹிம்ராம் ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அம்மோனியம் சல்பேட் எனும் விஷவாயு தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் மயக்கம் அடைந்தனர்.

இதையும் படிங்க: லஞ்சப் பணத்தை விழுங்கிய வருவாய்த்துறை அதிகாரி! லோக்ஆயுக்தா அதிகாரிகளை கண்டதால் பதற்றம்!

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிற தொழிலாளர்கள் உடனடியாக, மயக்கமடைந்த மூன்று பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள மூன்று பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, கடந்த மே 17ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆண்டாள் லெதர்ஸ் என்ற தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் நான்கு பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மாநில தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் - NCSK தலைவர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.