ETV Bharat / state

'ரஜினிக்கு வயதாகி விட்டது, விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்': கே.எஸ். அழகிரி

author img

By

Published : Feb 9, 2020, 8:22 AM IST

Updated : Feb 10, 2020, 9:02 AM IST

தருமபுரி: நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் அதிகளவில் ரசிகர்களாக இருக்கிறார்கள் எனவும் கூறினார்.

we-will-be-committed-to-vijay
we-will-be-committed-to-vijay

தருமபுரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி உரையாற்றும்போது கூறியதாவது:

ரூ.2 கோடி நஷ்டம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் என்எல்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் போது வருமானவரித் துறையினர் அவரை அங்கிருந்து அழைத்து வந்து சோதனை நடத்தினர்.
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் பட தயாரிப்பாளர்களுக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டை சீல் வைத்து விட்டு, அவர் படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு வந்த பின்னர் வருமான வரி சோதனை நடத்தி இருக்கலாம்.

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்துக்கு மட்டும் வருமான வரித்துறையினர் ரூ.66 லட்சம் செலுத்தினால் மேல்முறையீடு செய்யப்படாது. ரஜினிகாந்த் வருமானத்தை மறைத்தால் ரூ.66 லட்சம் ரூபாய் செலுத்தினால் விடுவிக்கப்படுகிறார்.
ரஜினிகாந்தை விடுவிக்க எந்த சட்டத்தில் எந்த பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் இரண்டு படங்களில் சில வசனங்களை பேசினார். அந்த வசனங்கள் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது.
ரஜினி மீதும் கோபம் இருந்தது. அதனால்தான் அவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்று கூறினார்.

நானும் ரசிகன்தான்
தமிழக அமைச்சர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனைகள் முடிவு என்ன ஆனது.
நடிகர் ரஜினிகாந்திடம் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது. ரஜினி ரசிகர் தான் தனக்கு 68 வயது ஆகிறது மற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். விஜயிடம் இளைஞர்கள் அதிக அளவு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

உறுதுணை
அதனால் தான்விஜய்யை குறி வைத்து உள்ளார்கள். ரஜினிக்கு வழங்கியது போல விஜய்க்கும் அறிக்கை ஒன்று தயாராகி வருகிறது.

விஜய்க்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்
விஜய் இந்த சோதனையில் உறுதியாக இருப்பார் என நம்புகிறேன். அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்.இவ்வாறு கே.எஸ். அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதையும் படிங்க:‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்'

Intro:நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் ரஜினிக்கு வயதாகிவிட்டது காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு.Body:நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் ரஜினிக்கு வயதாகிவிட்டது காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு.Conclusion:நடிகர் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் ரஜினிக்கு வயதாகிவிட்டது காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேச்சு.


தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இப்போது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் என்எல்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் பொழுது வருமானவரித் துறையினர் அவரை அங்கிருந்து அழைத்து வந்து வருமான வரி சோதனை யிட்டனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் பட தயாரிப்பாளர்களுக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜயின் வீட்டை சீல் வைத்து விட்டு பின்பு அவர் படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு வந்த பின் வருமான வரி சோதனை நடத்தி இருக்கலாம். நடிகர் ரஜினிகாந்த்க்கு மட்டும் வருமான வரித்துறையினர் 66 லட்சம் ரூபாய் செலுத்தினால் மேல்முறையீடு செய்யப் படாது. ரஜினிகாந்த் வருமானத்தை மறைத்தால் 66 லட்சம் ரூபாய் செலுத்தினால் விடுவிக்கப்படுகிறார்.ரஜினிகாந்தை விடுவிக்க எந்த சட்டத்தில் எந்த பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.நடிகர் விஜய் இரண்டு படங்களில் சில வசனங்களை பேசினார் அந்த வசனங்கள் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது ரஜினி மீதும் கோபம் இருந்தது ரஜினி மீது இருந்த கோபத்தை அறிக்கையாக எழுதிக் கொடுத்து அந்த அறிக்கையில் இந்தியாவில் இசுலாமியர்களுக்கு பிரச்சனை வராது என்ற அறிக்கையை தயார் செய்து கொடுத்ததால் குடி உரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசியதாக தெரிவித்தார். தமிழக அமைச்சர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் அந்த சோதனைகள் முடிவு என்ன ஆனது.நடிகர் ரஜினிகாந்திடம் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது ரஜினி ரசிகர் தான் தனக்கு 68 வயது ஆகிறது மற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். விஜயிடம் இளைஞர்கள் அதிக அளவு ரசிகர்களாக இருக்கிறார்கள் அதனால் தான்விஜய்யை குறி வைத்து உள்ளார்கள் ரஜினிக்கு வழங்கியது போல விஜய்க்கும் அறிக்கை ஒன்று தயாராகி வருகிறது .விஜய் இந்த சோதனையில் உறுதியாக இருப்பார் என நம்புகிறேன் அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் என கே எஸ் அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசினார்
Last Updated :Feb 10, 2020, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.