ETV Bharat / state

இந்த சாதியினர் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும்! - அன்புமணி சொன்ன சீக்ரெட்

author img

By

Published : Feb 16, 2023, 5:24 PM IST

Updated : Feb 16, 2023, 8:01 PM IST

'தமிழ்நாட்டில் பெரிய சமூகத்தினா், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் தான்; இந்த இரண்டு சமுதாயமும் சேர்ந்தால் 40 விழுக்காடு மக்கள் தொகையைப் பெற்றுள்ளனர். 40% மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும்' என அன்புமணி ராமதாஸ் கூறினார்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னியர் சமுகம் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னியர் சமுகம் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும்

தர்மபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணியின் தம்பி மகள் திருமணம் ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ், ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் தமிழ் முறைப்படி உறுதிமொழி சொல்ல மணப்பெண், மணமகன் உறுதிமொழி வாசித்து தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ், 'பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டங்கள் காரணமாகத்தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறியது என்றும் இதனால் தான் தருமபுரி மாவட்ட மக்கள் தூய்மையான குடிநீரை குடித்து வருகின்றனர் என்றார்.

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் நீர் பாசனத் திட்டங்களுக்கு பாமக தான் முக்கிய காரணம் என உறுதிபட தெரிவித்த அவர், எந்த கட்சியையும் சாராமல் இருக்கும் 55 சதவீத மக்கள் தான் தேர்தல் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பவர்கள் என்றார். இந்த திருமணத்தில் அரசியல் கட்சிகளை சார்ந்தோர், சாராதோர் என அனைவரும் கலந்து கொண்டுள்ளதால், மாவட்ட வளர்ச்சிக்கு பாமகவின் பங்களிப்பை விளக்குவதாக கூறினார்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என உறுதி தெரிவித்த அவர், இது சாதி பிரச்னை அல்ல, சமூக நீதிப் பிரச்னை என கூறினார். தமிழ்நாட்டில் பெரிய சமூகத்தினா், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் வன்னியர் சமுதாயத்தினரும் தான் என்பதால், இந்த இரண்டு சமுதாயமும் சேர்ந்தால் 40 விழுக்காடு மக்கள் தொகை வரும் என கூறினார். 40% மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் என்பதால்தான் இதனை தான் குறிப்பிடுவதாகவும் அன்பு மணி கூறினார்.

திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதை குறிப்பிட்ட அன்புமணி, முதலமைச்சர் ஜிகே மணியின் நண்பர் தான் என்றும், அவர் நினைத்தால் 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துவிடும் என பேசினார்.

இதையும் படிங்க: ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமையுங்கள்: உயர் நீதிமன்றம்

Last Updated : Feb 16, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.