ETV Bharat / state

தர்மபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை

author img

By

Published : Aug 12, 2021, 6:21 PM IST

தர்மபுரி நெக்குந்தியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார்.

ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்க கோரிக்கை

தர்மபுரி: நல்லம்பள்ளி தாலுகாவுக்குள்பட்ட நெக்குந்தி கிராமத்தில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்க தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கடந்த 2019 ஆம் ஆண்டு வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் மத்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கு (DRDO) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 850 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் எந்தவிதமான பணிகளும் தொடங்கதால் மீண்டும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார்.

அக்கடிதத்தில், "நெக்குந்தி பகுதியில் மத்திய ராணுவ ஆராய்ச்சி மையத்திற்கு 850 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டின் பின் தங்கிய தர்மபுரி மாவட்டத்தில் ரானுவ ஆராய்ச்சி மையம் தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்: கூட்டுப்பண்ணை முறையை ஊக்குவிக்க வேண்டும் - இயற்கை வேளாண் அறிஞர் பாமயன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.