ETV Bharat / state

அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம்

author img

By

Published : Jan 29, 2020, 9:44 AM IST

தருமபுரி: அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் இந்த வாரம் ரூ. 2.25 கோடிக்கு பருத்தி ஏலம் போயுள்ளது.

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கம் பருத்தி ஏலம்  பருத்தி ஏலம்  cotton sale harur
பருத்தி மூட்டைகள்

நடப்பு ஆண்டிற்கான பருத்தி ஏலம் கடந்த வாரம் தொடங்கி, அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரைத் தேங்காய்களை எடுத்துவந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த வார பருத்தி ஏலத்தில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்து 640 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், விவசாயிகள் எடுத்துவந்த பத்தாயிரம் பருத்தி மூட்டை ரூ. 2.25 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கம் பருத்தி ஏலம்  பருத்தி ஏலம்  cotton sale harur
விவசாயிகள் எடுத்து வந்திருந்த பருத்தி மூட்டைகள்

ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 4,870 முதல் ரூ. 5,716 வரையிலும், வரலட்சுமி ரகம் ரூ. 6,259 முதல் ரூ. 7,259 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தியின் வரத்து ஐந்தாயிரம் மூட்டை அதிகரித்திருந்தது. கடந்த வாரம் ரூ. 85 லட்சத்திற்கு விற்பனையான பருத்தி, இந்த வாரம் ரூ. 1.50 கோடி அதிகரித்து ரூ. 2.25 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இதையும் படிங்க: 15 ஆண்டுகளுக்கான பணிகளை ஒரே ஆண்டில் முடித்திருக்கிறோம்’

Intro:அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் ரூ.2.25 கோடிக்கு பருத்தி ஏலம்Body:அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் ரூ.2.25 கோடிக்கு பருத்தி ஏலம்Conclusion:அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில் ரூ.2.25 கோடிக்கு பருத்தி ஏலம்



தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், பருத்தி மற்றும் மஞ்சள் ஏலம் விடப்பட்டு வருகிறது.  இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர். 


இந்த ஆண்டிற்கான பருத்தி ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. இந்த வார பருத்தி ஏலம் அரூர் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 1640 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.  இதில் 1640  விவசாயிகள் எடுத்து வந்த  10,000 பருத்தி மூட்டை ரூ.2.25 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதில்  ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், ரூ.4,870 முதல் ரூ. 5,716 வரையிலும், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6,259 முதல்  ரூ.7,259 வரையில் ஏலம் போனது.  பருத்தி விற்பனை முடிந்தவுடன் அனைத்து விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டது. 


கடந்த வார்த்தை விட, இந்த வாரம் பருத்தி வரத்து 5000 மூட்டை அதிகரித்திருந்தது. மேலும் விலை சற்று அதிகரித்தது.  கடந்த வாரம் ரூ.85 இலட்சத்திற்கு விற்பையான பருத்தி, இந்த வாரம் ஒரு மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.2.25 கோடிக்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவித்தனர். இது கடந்த வார்ததை

 விட சுமார் ரூ.1.50 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.