ETV Bharat / state

வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்த கோரிக்கை.. மனமிறங்குமா மத்திய அரசு?

author img

By

Published : Apr 8, 2023, 4:27 PM IST

Updated : Apr 9, 2023, 6:52 AM IST

சென்னை - கோவை, கோவை - சென்னை 'வந்தே பாரத்' ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Public request to stop Vande Bharat train at Morapur!..
வந்தே பாரத் ரயிலை மொரப்பூரில் நிறுத்தக்கோறி பொதுமக்கள் வேண்டுகோள்!..

தருமபுரி: பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்ரல் 8) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத்(Vande Bharat) ரயிலைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர் வழியாகத் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை தாண்டி சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களைக் கடந்து கோயமுத்தூர் சென்றடைகிறது.

நாளை முதல்(ஏப்ரல் 9) சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் சேலம் சந்திப்பு, ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் சென்று இறுதியாக கோயம்புத்தூர் சந்திப்பு சென்றடைகிறது. இன்று துவக்க நாளை முன்னிட்டு பெரம்பூர், அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் வந்தே பாரதத்தில் செல்ல வேண்டுமென்றால், சேலம் சென்று அங்கிருந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட மொரப்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை நிறுத்தினால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், இந்த ரயிலின் மூலம் சென்னை மற்றும் கோவை செல்வதற்கும், மேலும் சென்னையில் இருந்து தருமபுரி வருவதற்கும், கோவையில் இருந்து தருமபுரி வருவதற்கும் வாய்ப்பாக பயன்படும் வகையில் இருக்கும்.

மொரப்பூரில் இருந்து சுமார் 3 மணி நேரத்திலேயே சென்னை செல்ல முடியும். மற்ற ரயில்களில் செல்லும் பொழுது, ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகிறது. எனவே, மத்திய அரசு ரயில்வே நிர்வாகம் மொரப்பூர் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது தருமபுரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்ட தலைநகரில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால், தருமபுரியில் இருந்து பேருந்தில் மொரப்பூர் சென்று மொரப்பூரிலிருந்து பின் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை போக்கும் வகையில், தருமபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இன்னும் இது தொடர்பான பணிகள் தொடங்கவில்லை. எனவே, மொரப்பூர் - தருமபுரி இணைப்பு திட்டம் வரும் வரை, வந்தே பாரத் ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு தான் நாட்டு மாடுகளை காக்கிறது.. 400 ஆண்டு பழமையான சந்தையில் விவசாயிகள் தரும் சிறப்பு தகவல்கள்!

Last Updated :Apr 9, 2023, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.