ETV Bharat / state

அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் புதிய பூட்டு வழிபாடு.. சிறப்பு என்ன?

author img

By

Published : Feb 13, 2023, 4:10 PM IST

Updated : Feb 16, 2023, 7:29 AM IST

தருமபுரி அதியமான்கோட்டை காலபைரவர் ஆலயத்தில் புதிய பூட்டு போட்டு பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

அதியமான்கோட்டை
அதியமான்கோட்டை

அதியமான்கோட்டை காலபைரவர் ஆலயம்.. புதிய பூட்டு போட்டு வழிபாடு

தருமபுரி: தருமபுரியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் புகழ்பெற்ற காலபைரவர் ஆலயம் உள்ளது. காசிக்கு அடுத்த காலபைரவர் என்றும்; தட்ஷணகாசி காலபைரவர் என்றும் அழைப்பர். அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமையான இந்த கால பைரவர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அஷ்டமி தினத்தில் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இக்கோயிலில் திருமணத் தடை உள்ளவர்கள் சாம்பல் பூசணியில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால், ஏராளமான பக்தர்கள் சாம்பல் பூசணி மற்றும் தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோயில் வளாகத்தில் உள்ள மகா வில்வம் மற்றும் வன்னிமரம் அருகே உள்ள இரும்பு வேலியில் பக்தர்கள் பூட்டு போட்டு வழிபட்டுச் செல்கின்றனர். காலபைரவர் கோயிலில் பக்தர்கள் திடீரென பூட்டு போட்டு வழிபட்டு செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோயில் உள்ள அர்ச்சகரிடம் கேட்டபோது, 'பூட்டு போட்டுவிட்டு செல்பவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்களே இப்போதுதான் பார்க்கிறோம். யாரோ ஒருவர் பூட்டு போட்டு சென்றுள்ளார். அதனைப் பார்த்து மற்றவர்களும் பூட்டு போட்டுவிட்டு வழிபட்டுச் செல்கிறார்கள்’ என்றார்.

மேலும் பேசிய அவர், 'பழங்காலத்தில் சிவன் கோயிலை இரவில் பூட்டு போட்டு சாவியை காலபைரவர் இடம் வைத்து விட்டு செல்வார்கள். காலபைரவர் காவல் தெய்வம் என்பதால் அவ்வாறு கடைப்பிடித்தார்கள். ஆனால், இக்கோயிலில் திடீரென பக்தர்கள் பூட்டு போட்டு வழிபட்டுச் செல்வது புதியதாக உருவாகியுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் 2028இல் திறக்கப்படுமா? - சிறப்பு தொகுப்பு

Last Updated : Feb 16, 2023, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.