ETV Bharat / state

சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி, மகள், பேத்தி உயிரிழப்பு!

author img

By

Published : Nov 29, 2019, 11:53 AM IST

கடலூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
கடலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு


கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் அருகே ரேஸ் மில் தெருவைச் சேர்ந்தவர்கள் நாராயணன்(50), மாலா(40) தம்பதியினர். இவர்களது மகள் மகேஸ்வரி (21), தனது குழந்தைகள் யுவஸ்ரீ (3), தனுஸ்ரீ (1 1/2) ஆகியோருடன் பண்ருட்டியிலிருந்து தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இரவு குடும்பத்தோடு வீட்டில் தூங்கிகொண்டு இருந்தபோது அப்பகுதியில் பெய்த மழையால் வீடு சேதம் அடைத்து சுவர் இடிந்து விழுந்தது.

கடலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

இதில் மாலா, மகேஸ்வரி, குழந்தை தனுஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை மீட்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்த நாராயணன், வேல் முருகன் ஆகியோரும் நாராயணின் இன்னொரு மகள் ரஞ்சிதா (18), பேத்தி யுவஸ்ரீ ஆகிய ஐந்து பேரும் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை தனுஸ்ரீ மீது மின்சாரம் பாயந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

"இன்னொரு சுஜித் இறக்கமாட்டான்" - விவசாயிக்குள் ஒளிந்திருந்த விஞ்ஞானி

Intro:கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி- நேற்று இரவு தாய் வீட்டிறக்கு வந்து தங்கியால் ஏற்பட்ட பரிதாபம் Body:கடலூர் திருப்பாதிபுலியூர் சுசிலா நகர் ரைஸ் மில் தெரு பகுதியை சேர்ந்வர் நாராயணன் (50) கொத்தனார் என்பவர் தனது மனைவி மாலா (40) என்பவருடன் ேர்ந்து தங்கி வந்துள்ளார் இந்த நிலையில் நாராயணன் மகள் மகேஷ்வரி (21)பேத்தி தனஶ்ரீ (11/2) ரஞ்சிதா ஆகியோர் நேற்று மதியம் தந்தை வீட்டிற்று பண்ருட்டியில் இருந்து வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் இரவு குடும்பத்தோடு 6 பேர் இரவு வீட்டில் தூங்கிகொண்டு இருந்த போது கடலூரில் பெய்து வரும் மழையால் வீடு சேதம் அடைத்து சுற்றுசுவர் இடிந்து விழுந்தது


இதில் 1அரை வயதுடைய பச்சிளம் பெண் குழந்தை தனஶ்ரீ மற்றும் பாட்டி மாலா,தாய் மகேஷ்வரி ஆகிய 3 பேர் மீது சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்தனர்

இவர்களை மீட்க சென்ற அப்பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிக்கிச்சை பெற்று வருகின்றனர்.

சுவர் இடிந்து விழுந்ததும் பெண் குழந்தை மீது மின்சாரம் பாயந்துள்ளது என மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்

சுவர் இடிந்து விழுந்த 3 பேர் பலி ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


இதனை தொடர்நது கடலூர் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் வீடுகளை ஆய்வு செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.