ETV Bharat / state

கள்ளச் சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது!

author img

By

Published : Dec 6, 2019, 11:20 AM IST

கடலூர்: பண்ருட்டியில் கள்ளச் சாராயம் விற்ற நபரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கள்ள சாராயம் விற்றவர்
கள்ள சாராயம் விற்றவர்

கடலூர் பண்ருட்டி பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 19ஆம் தேதி தட்டாஞ்சாவடி படைவீட்டமன் கோயில் அருகில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் தேவி மற்றும் காவல் துறையினர், கள்ளச் சாராயம் விற்பனை செய்பவரை கண்காணித்து வந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (49), 165 லிட்டர் சாராயத்தை கொண்டு சென்றதைக் கண்ட காவல் துறையினர் அவரை மடக்கிப்பிடித்து அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைதான ராமச்சந்திரன்
குண்டர் சட்டத்தில் கைதான ராமச்சந்திரன்

பின்பு, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு, பண்ருட்டி காவல் நிலையங்களில் 10 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டார்.

இதையும் படிங்க: மாமுல் வேட்டையில் ஈடுபட்ட கள்ள போலீஸ் கைது..!

Intro:கடலூரில் சாராய வியாபாரி குண்டர் தடுப்பு காவலில் கைது
Body:கடலூர்
டிசம்பர் 6,

கடலூரில் பண்ருட்டி பகுதியில் கள்ளசாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 19 ம்தேதி தட்டாஞ்சாவடி படைவீட்டமன் கோயில் அருகில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் மது குற்றத்தை தடுக்கும் பொருட்டு கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் (49) என்பவர் 165 லிட்டர் சாராயம் வைத்திருந்தவரை போலீசார் மடக்கிப்பிடித்து அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் பண்ருட்டி காவல் நிலையங்களில் 10 சாராய வழக்குகள் உள்ளன.

எனவே இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் ராமசந்திரன் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.