ETV Bharat / state

சொத்துத்தகராறில் சகோதரரின் மனைவியை ஓட ஓட வெட்டிய சம்பவம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

author img

By

Published : Jul 20, 2022, 11:05 PM IST

கடலூர் திட்டக்குடி அருகே சொத்துத்தகராறில் சகோதரரின் மனைவியைப் பட்டபகலில் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சொத்து தகராறில் சகோதரரின் மனைவியை ஓட ஓட வெட்டிய சம்பவம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சொத்து தகராறில் சகோதரரின் மனைவியை ஓட ஓட வெட்டிய சம்பவம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கடலூர்: திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்து வருபவர், காவேரி. இவர் கணவரை இழந்து பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் இவரது கணவரின் சகோதரர் சுப்பிரமணியன், சகோதரிகளுடன் சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், காவிரிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் சுப்பிரமணியன் காவிரியை அங்கிருந்த அரிவாள் மனையால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் காவேரிக்கு தலை,தோள்பட்டை பகுதி, இரு கைகளிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் திட்டக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பட்டப்பகலில் பெண் ஒருவரை ஓட ஓட ஒருவர் கொடூரமாக அரிவாள் மனையால் வெட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சொத்து தகராறில் சகோதரரின் மனைவியை ஓட ஓட வெட்டிய சம்பவம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இதையும் படிங்க: நீதிமன்றம் சம்மன் அனுப்பினால் கூட லீனா மணிமேகலை ஆஜராகமாட்டார்; சுசி கணேசன் தரப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.