ETV Bharat / state

6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரலைப் பேசி கோவை இளைஞர் சாதனை!

author img

By

Published : Apr 27, 2021, 10:03 AM IST

கோவை: ஆறு நிமிடத்திற்குள் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், கார்டூன் கதாபாத்திரங்கள் என 128 பேரின் குரல்களைப் பேசி, இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

record
இளைஞர் சாதனை

கோவை மாவட்டம் கணபதி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (19), தனியார் கல்லூரியில் படித்துவருகிறார்.

இவர் கடந்த மார்ச் 30 ஆம் தேதியன்று 5:51 நிமிடத்தில் அப்துல் கலாம், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் குரல், சிவாஜி கணேசன், நம்பியார், ரகுவரன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரை பிரபலங்களின் குரல், எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் குரல், சின்சேன், ஜாக்கிச்சான் போன்ற கார்டூன் கதாபாத்திரங்களின் குரல் என மொத்தம் 128 பிரபலங்களின் குரல்களைப் பேசி அதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

128 பிரபலங்களின் குரலைப் பேசி கோவை இளைஞர் சாதனை

இதனைப் பரிசீலித்த அந்நிறுவனம் இவருக்கு VOICE IMITATION OF MAXIMUM EMINENT PERSONALITIES என்ற விருதினை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: தலைகீழாகத் தொங்கியபடி முதியவர் யோகாசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.