ETV Bharat / state

நாற்று கட்டுகளை நாசப்படுத்திய யானைகள் !

author img

By

Published : Aug 6, 2019, 10:42 PM IST

உதகை : நெல் நடவுக்காக வைத்திருந்த நாற்றுக் கட்டுகளை யானைகள் மிதித்து நாசப்படுத்தியதால் 3 ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய முடியாது என விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

நாற்று கட்டுகளை நாசப்படுத்திய யானை கூட்டங்கள் ! விவசாயிகள் வேதனை!

உதகையில், கூடலூரை அடுத்துள்ள புத்தூர் வயல் பகுதியில் ஆடி மாத நடவுக்காக விவசாயிகள் நிலத்தையும் நாற்றுக்கட்டுகளையும் தயார்நிலையில் வைத்திருந்தனர். இந்நிலையில், காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து நெல் நாற்று கட்டுகளை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மூன்று ஏக்கருக்கு நடவு செய்ய வைத்திருந்த நெல் நாற்று கட்டுகள் அனைத்தையும் யானைகள் நாசம் செய்தகாக புலம்பி தீர்த்தனர். பல்லாயிர கணக்கில் செலவு செய்து நெல் நாற்றுக்கள் நடவு பணி செய்யும் சமயத்தில் யானை புகுந்து நெல் நாற்றுக்களை சேதபடுத்தியது, அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:OotyBody:உதகை 06-08-19
நெல் நடவுக்காக கட்டு கட்டாக வைத்திருந்த நாற்று கட்டுகளை மிதித்து நாசப்படுத்திய யானை கூட்டங்கள். 3 ஏக்கர் நடவு செய்ய முடியாது என விவசாயிகள் வேதனை.
கூடலூரை அடுத்துள்ள புத்தூர் வயல் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நெல் விவசாயத்தில் ஈடுபடுவது வழக்கம். பல தலைமுறைகளாக நெல் பயிரிட்டும் போதும் வனவிலங்ஙகளின் அச்சுறுத்தியது இல்லை. இந்நிலையில் இந்த வருடம் ஆடி மாதம் துவங்கிய நிலையில் விவசாயிகள் நிலத்தில் ஏர் உழுது, விதை நெல் விதைத்து அது வளர்ந்த நிலையில் அதனை கட்டு கட்டாக பிரித்து நடவுக்காக ஏர் உழுத நிலத்தில் வைத்திருந்தனர். காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து அத்தனை நெல் நாற்று கட்டுகளை மிதித்தும், தின்றும் சேதபடுத்தியுள்ளது. இதனை வந்து பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். 3 ஏக்கருக்கு நடவு செய்ய வைத்திருந்த நெல் நாற்று கட்டுகள் அனைத்தையும் யானை கள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல்லாயிர கணக்கில் செலவு செய்து நெல் நாற்றுக்கள் நடவு பணி செய்யும் சமயத்தில் யானை புகுந்து நெல் நாற்றுக்களை சேதபடுத்தியது அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.