ETV Bharat / state

கோவையில் 'அம்பேத்கர் சிலை நிறுவுக' - தபெதிக வலியுறுத்தல்!

author img

By

Published : Apr 23, 2023, 10:52 PM IST

கோவை மாநகரில் சட்டமேதை அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோவையில் 'அம்பேத்கர் சிலை' என்பன உள்ளிட்ட கோரிக்கை - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தல்

கோவை: கோவையில், ஆட்சி அதிகாரத்தில் சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஏப்.23) ஒருநாள் பிரச்சார பயணம் நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு துவங்கப்பட்ட இந்த பிரச்சார பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.

இந்தப் பிரச்சார பயணத்தில் கோவை மாமன்ற தீர்மானத்தின்படி செஞ்சிலுவை சங்கம் அருகில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவசிலை அமைத்திட வேண்டும், அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், எஸ்சிஎஸ்டி மக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும், துப்புரவு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்து அரசு நிர்ணயிக்கக்கூடிய கூலியை கொடுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம்: குறிப்பாக, ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், பொது தண்ணீர் தொட்டிகள் மற்றும் பொது சுடுகாடு உள்ளிட்டவைகளில் சமத்துவபுரம் போன்ற நிலையினை உருவாக்கிட வேண்டும், அரசு பணியாளர் காலி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும், உண்ண உணவு உடுக்கை உடை இருக்க இருப்பிடம் அனைவருக்கும் கிடைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசும் உறுதியளித்திட வேண்டும், தமிழகம் எங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலிகளை அகற்றி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல அமைப்புச் செயலாளர் சுசி கலையரசன் ஒருங்கிணைப்பிலான இந்தப் பிரச்சார பயணத்தில் சிபிஎம், ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.

இதையும் படிங்க: சுதந்திரம் பெற்றபின் முதல்முறையாக சாலை வசதி பெறும் கிராமங்கள்; தருமபுரி எம்.பி.க்கு நன்றி தெரிவித்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.