ETV Bharat / state

6 வயது சிறுவன் திடீர் மரணம்: உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்

author img

By

Published : Apr 20, 2020, 1:05 AM IST

கோயம்புத்தூர்: கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த சிறுவன் உடல் நிலை மோசமாகி உயிரிழந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதால் அவரது இறப்பில் காவல் துறையினர் சந்தேகமடைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

six year old boy death with body wound
six year old boy death with body wound

கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் அபிஷேக் (6). நேற்று மதியம் அபிஷேக்கின் உடல் நிலை மிகவும் மோசமாகி மயக்கம் அடைந்த நிலையில், அவரது பெற்றோர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல கோவில்மேடு செக்போஸ்ட் அருகே தூக்கி வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவனை ஆம்புலன்சிலேயே பரிசோதனை செய்ததில் சிறுவன் இறந்தது தெரியவந்தது. சிறுவனின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் சிறுவனின் மரணம் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறு வயது சிறுவன் திடீர் மரணம்

சிறுவனின் உடல் முழுவதும் பல காயங்கள் இருப்பதால் சிறுவன் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...பெரம்பலூரில் அடையாளம் தெரியாத நிலையில் பெண் சடலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.