ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வைக்க தியாகம் செய்ய தயார் - எஸ்டிபிஐ

author img

By

Published : Dec 20, 2019, 3:07 PM IST

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வைக்க எந்தத் தியாகத்தையும் செய்ய எஸ்டிபிஐ கட்சியினர் தயாராகவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

Ready to sacrifice to repeal the Citizenship Amendment Act, says SDPI party state head nellai mubarak speech
Ready to sacrifice to repeal the Citizenship Amendment Act, says SDPI party state head nellai mubarak speech

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோவையில் உக்கடம், ஆத்துபாலம் போன்ற பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், “இந்தப் புதிய சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இதனை எதிர்த்து பல போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் உக்கடம், ஆத்துப்பாலம் போன்ற பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான எங்களின் போராட்டத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இது மக்களின் உணர்வுகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் நடத்தப்படும் போராட்டம். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் அதை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது மிகவும் கவலையளிக்கிறது. அமைதியாக நடக்கும் போராட்டம், காவல் துறையினரின் அடக்குமுறையால் வன்முறையின் பக்கம் அழைத்துச் செல்லப்படுகிறது.

இச்சட்டத்தை கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கும்போது தமிழ்நாடு அரசும் புறக்கணிக்க வேண்டும். இச்சட்டத்தை திரும்பப் பெற வைப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியினர் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகவே இருக்கிறோம். இப்போராட்டத்தின் எதிரொலி தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: திருமா, சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்குப் பதிவு!

Intro:குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பு.Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உக்கடம், ஆத்துபாலம் போன்ற பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர் இந்த புதிய சட்டம் ஆண்களுக்கு எதிரானது என்றும் அதைக் குறித்த போராட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்றும் அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் உக்கடம் ஆத்துப்பாலம் கொண்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார். மேலும் சென்னை திருச்சி நெல்லை மதுரை போன்ற நகரங்களிலும் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நண்பன் போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்றும் இது மக்களின் உணர்வுகளை நடத்தப்படும் போராட்டம் என்றும் தெரிவித்தார். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும் அதை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது கவலையளிக்கிறது என்று கூறினார் அமைதியாக நாங்கள் நடக்கும் போராட்டம் காவல்துறையினர் தடுக்கும் முயற்சியினால் வன்முறை பக்கம் அழைத்துச் செல்கிறது என்று கூறினார். இச்சட்டத்தை கேரளா புதுச்சேரி மேற்கு வங்கம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கும் போது தமிழக அரசும் சட்டத்தை புறக்கணிக்க வேண்டுமென்று கூறினார் இச்சட்டத்தை திரும்பப்பெற எஸ்டிபிஐ கட்சியினர் எப்படி தியாகத்தையும் செய்வோம் என்றும் தெரிவித்தார். இந்தப் போராட்டமானது தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலி ஆகும் என்றும் கூறினார் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.